சாம்பியன்ஸ் ட்ராப் தொடரில் இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணியுடன் மோதும் நிலையில், ரெய்னா இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணி ஏ பிரிவில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்னர் வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் தோற்கடித்துவிட்டது.
இந்தநிலையில் நியூசிலாந்து அணியுடன் மோதிய ஆட்டத்தில், இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. அதாவது இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறி எதிரணி 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மோதுகிறது.
இன்றைய போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நிற்கும் ஒரு போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில், உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து காத்து இருக்கிறது. அதேபோல், ஆஸ்திரேலியாவும் சாம்பியன்ஸ் ட்ராபியில் எப்படியாவது கப் அடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் முயற்சித்து வருகிறது.
அந்தவகையில் இதுகுறித்து ரெய்னா பேசியிருக்கிறார். “எனக்கு மற்ற அணிகளிடம் அடிவாங்குவது கூட பயமில்லை. ஆனால் நாக் அவுட் போட்டிகளில் மஞ்சள் ஜெர்ஸி அணிந்தவர்களிடம் தோற்பது என்றால்தான் பயம்.” என்று பேசினார்.
கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வென்றதே இல்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றது. அதன் பிறகு நடந்த எல்லா ஐசிசி நாக் அவுட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது.
இன்று இந்திய அணி வென்றுவிட்டால், ஃபைனலுக்கு செல்லும். இதன்மூலம் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பிருக்கிறது. இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.