Ind Vs Ban: விராட்டுக்கு முன் ரிஷப் பண்டை அனுப்பிய கம்பீர்… அதிரடியாக விளையாடிய கோலி!

Virat Kohli in Ind Vs Ban test
Virat Kohli
Published on

இந்தியா பங்களாதேஷ் இடையே நடைபெற்று வரும் போட்டியில், கம்பீர் விராட் கோலிக்கு முன்னர் ரிஷப் பண்ட்டை பேட்டிங் செய்ய அனுப்பினார். அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி அதிக ரன்கள் எடுத்தபிறகு விக்கெட் இழந்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடைய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி முதல் மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டது. இந்த மூன்று நாட்களில் மொத்தம் 32 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இதில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து இன்று நான்காவது நாள் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்திருந்தது.

இன்னும் ஒன்றரை நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஓப்பனர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடி ரன்கள் எடுத்தனர். ரோஹித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 10.1 ஓவரில் எல்லாம் 100 ரன்களை எட்டியது.

ஜெய்ஸ்வால் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்தவகையில் நான்காம் வரிசையில் விராட் கோலியே களமிறங்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக ரிஷப் பண்ட் களமிறங்கினார். ஏனெனில், சமீபக்காலமாக விராட் கோலி மிகவும் பொருமையாக ரன் சேர்க்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதனால், ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். இதனால், இந்திய அணி வேகமாக ரன் சேர்க்கும் என்ற யோசனையில் நான்காவது வரிசையில் களமிறக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட்டில் சாதிக்க ஃபிட்னஸ் முக்கியமா? திறமை முக்கியமா?
Virat Kohli in Ind Vs Ban test

ஆனால், அவர் 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலி பேட்டிங் களமிறங்கினார். ஆனால், விமர்சனங்களுக்கு முற்றுப்புளி வைக்கும் விதமாக இவரின் ஆட்டம் அமைந்தது.  35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார்.

இதனால், சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டினார். இந்த மைல் கல்லை விரைவாக எட்டிய கிரிக்கெட் வீரர் என்ற சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார். சச்சின் 623 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்தார். ஆனால், விராட் கோலி 594 இன்னிங்ஸில் இந்த சாதனையை செய்தது குறிப்பிடத்தக்கது.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com