கிரிக்கெட்டில் சாதிக்க ஃபிட்னஸ் முக்கியமா? திறமை முக்கியமா?

Rohit Sharma Fitness
Indian team
Published on

உலகளவில் பிரபலமான விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. பொதுவாக ஒரு வீரர் விளையாட்டில் நீண்ட காலம் சாதிக்க விரும்பினால் ஃபிட்னஸ் மிகவும் முக்கியம் என்பது பலருடைய கருத்தாகும். ஆனால், ஃபிட்னஸ் இல்லையென்றால் என்ன? திறமை இருக்கிறதே விளையாட்டில் சாதிக்க என பிரபல கிரிக்கெட் வீரர் கூறியிருக்கிறார். யார் அந்த வீரர்? என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இப்போது பார்ப்போம்.

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் ஃபிட்டான வீரர் என்றால் பலரும் உடனே கூறுவது விராட் கோலியின் பெயரைத் தான். அதற்கேற்ப அவரது புள்ளி விவரங்களும் அபாரமாக உள்ளன. விராட் கோலியுடன் இணைந்து விளையாடி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். அதிலும் கேப்டன் பொறுப்பை ஏற்றத்தில் இருந்து, சொந்த சாதனைகளுக்கு இடம் கொடுக்காமல் அணியின் நலனுக்காக அதிரடியாக விளையாடி வருகிறார். இருப்பினும் ரோஹித் சர்மா ஃபிட்னஸ் விஷயத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும் என சிலர் தெரிவித்து வந்தனர். இவர்களுக்கு எல்லாம் தற்போது பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித்.

ஃபிட்னஸ் குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், “கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக சுமார் 500 போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுமாதிரியான சாதனைகளை செய்தது வெகுசிலரே. ஒரு போட்டியில் விளையாட 100% தயார் நிலையில் இருக்க வேண்டும். இதைத் தான் இத்தனை நாட்களாக நான் செய்து வருகிறேன். கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் என்பது, உடல் வடிவத்தை மட்டும் பொறுத்து அமைவதில்லை. அணியின் வெற்றிக்கு நாம் அளிக்கும் பங்களிப்பையும் பொறுத்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 முதல் 4 நாட்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 50 ஓவர்கள் மற்றும் T20 கிரிக்கெட்டில் 20 ஓவர்கள் என முழுமையாக ஆர்வத்துடன் ஃபீல்டிங் செய்ய முடிந்தால் அதுவே நம்முடைய ஃபிட்னஸை உணர்த்தி விடும். ஆகையால் ஃபிட்னஸை விடவும் திறமை முக்கியம். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவது, எனது உடலில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதற்கேற்ப ஓய்வெடுத்து என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Talent
Rohit Sharma
இதையும் படியுங்கள்:
ஜெயிக்கப் போவது யாரு? ரிக்கி பான்டிங்கின் கணிப்பா? இந்தியாவின் நம்பிக்கையா?
Rohit Sharma Fitness

நவீன கால கிரிக்கெட்டில் அசாத்திய வீரராக திகழும் ரோஹித் சர்மா, சமீபத்தில் கேப்டனாக டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஃபிட்னஸை விட திறமை முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார்.

ரோஹித் சர்மாவை போலவே உடல் அளவில் பருமனாக இருக்கும் சர்ஃப்ராஸ் கானும் சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஃபிட்னஸ் முக்கியம் தான்; அதே நேரம் அணியின் வெற்றிக்கு பங்காற்றும் திறமையும் முக்கியம் என தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com