Ind Vs Ban: இந்திய அணி பயிற்சியில் ஈடுபடவில்லையா? Over confident-அ இருக்குமோ?

Indian Team
Indian Team
Published on

இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 8 சுற்றில் நேருக்கு நேர் மோதவுள்ளன. இந்தநிலையில், இந்திய அணி எந்தவிதமான பயிற்சியிலும் ஈடுபடவில்லை என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. ஒருவேளை தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வரும் இந்திய அணிக்கு Over Confident வந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், உண்மை இதோ…

நடப்பு ஆண்டு உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் குரூப் சுற்று அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தன. இதனையடுத்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப்பெற்ற 8 அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சுற்றின் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகின்றன.

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஃப்கானிஸ்தான் அணியுடன் விளையாடியது. இதனையடுத்து இன்று வங்கதேச அணியுடன் மோதவுள்ளது இந்திய அணி. இந்தநிலையில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபடவில்லை என்பது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய அணி 3735 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளது. குறிப்பாக, ஜூன் 20 அன்று இந்திய அணியின் முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டி பார்போடோஸ் நகரில் நடைபெற்றது. அந்த போட்டி முடிந்தக் கையோடு, அங்கிருந்து வங்கதேச அணிக்கு எதிராக விளையாட ஆன்டிகுவா நகரத்திற்கு இந்திய அணி வீரர்கள் பயணம் செய்தனர். சுமார் 522 கிலோமீட்டர்கள் பயணம் செய்து இன்று இந்திய அணி போட்டியில் களமிறங்கவுள்ளது.

இந்திய வீரர்கள் போட்டியில் விளையாடி விட்டு அதே களைப்புடன் பயணமும் செய்தனர். இதைப் புரிந்துக்கொண்ட இந்திய அணி நிர்வாகம், அடுத்த நாள் பயிற்சி செய்ய விருப்பம் உள்ள வீரர்கள் மட்டும் பயிற்சி செய்யலாம் என கூறி இருந்தது. இந்த நிலையில், இந்திய வீரர்கள் யாருமே களைப்பினால் பயிற்சியில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மோசமான சாதனையைப் படைத்த ரோஹித்… என்ன தலைவா இதலாம்??
Indian Team

உலகக்கோப்பை தொடரில் மட்டுமல்ல, ஐசிசி தொடர்கள் அனைத்திலுமே ஒரு பெரிய தொல்லை, ஒரு மைதானத்திலிருந்து மற்றொரு மைதானத்திற்கு செல்ல பல தொலைவு பயணம் செய்வதுதான். இதனால், வீரர்கள் களைப்படைந்து பயிற்சியில் ஈடுபட முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுக்கூட பரவாயில்லை அதே களைப்புடன் அடுத்தப் போட்டியில் விளையாடும் அந்த வலி இருக்கே… அதனை வீரர்களே அறிவார்கள்…  

நாம் அவர்களின் கஷ்டத்தை நினைத்துப் பார்த்து, தோல்வியில் கைக்கொடுப்போம். அல்லது வார்த்தைகளால் புண்படுத்தாமலாவது இருப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com