மோசமான சாதனையைப் படைத்த ரோஹித்… என்ன தலைவா இதலாம்??

Rohit sharma
Rohit sharma
Published on

நேற்று டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக சாதனைப் படைத்த வீரர்கள் என்றால், விராட், ரோஹித், பும்ரா, ஹார்திக், அஸ்வின் என்று சொல்லிவிடமுடியும். குறிப்பாக ரோஹித் ஒரே உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர், கேப்டனாக அதிக சிக்சர் அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக இப்போது ஒரு மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.

ரோஹித் ஷர்மா இறங்கி அடித்தால், 50, 100 தான். இல்லையென்றால், ஒரு நம்பர் ரன்தான். அதற்கு உதாரணம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் கூட கேப்டன் ரோஹித் சர்மா, அயர்லாந்துக்கு எதிராக அரை சதம் அடித்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன்கள், அமெரிக்காவுக்கு எதிராக மூன்று ரன்கள் என சொற்ப ரன்களும் அடித்திருந்தார்.

இந்தநிலையில்தான், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் ஷர்மா மாஸாக ரன் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், வெறும் 8 ரன்களில் வெளியேறினார்.

ஐசிசி தொடர்களிலேயே 19 முறை ரோஹித் ஷர்மா ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்திருக்கிறார். இதன் மூலம் ஐசிசி தொடர்களில் அதிக முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்த இந்திய வீரர் என்ற சோகமான சாதனை, தற்போது ரோகித் சர்மாவுக்கு கிடைத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
Ind Vs Afgh: இன்று சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதும் இந்தியா!
Rohit sharma

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் யுவராஜ் சிங் இருக்கிறார். யுவராஜ் 17 முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார். விராட் கோலி 14 முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

தோனி 13 முறையும், சுரேஷ் ரெய்னா 13 முறையும், சச்சின் 12 முறையும் இதே முறையில் ஆட்டம் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மோசமான சாதனையை மாஸான சாதனையாக மாற்றுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com