Ind Vs Bang: சேப்பாக்கத்தில் இதுதான் அஸ்வினுக்கு கடைசி போட்டியா? வெளியான தகவல்!

Aswin in Ind Vs Bang
Ind Vs Bang
Published on

வங்கதேச அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி வீரர் அஸ்வின்  சதம் அடித்துள்ளார். இதனையடுத்து சேப்பாக்கத்தில் அஸ்வின் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி இது என்ற செய்திகள் வந்துள்ளன.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடைய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. இதில் இந்திய அணியின் வீரர்கள் சற்று தடுமாறியே வந்தனர். ஜெய்ஸ்வால் மட்டுமே அரைசதம் அடித்தார். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தலா 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். கே.எல்.ராகுல் 16 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஜடேஜா அஸ்வின் கூட்டணியில் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன. மொத்தமாக ஜடேஜா 86 ரன்கள், அஸ்வின் 113 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்தது.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் சேர்த்திருந்தது. அஸ்வின் 112 பந்துகளுக்கு 102 ரன்கள் சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 91 ஆக இருந்தது. அதேபோல ரவீந்திர ஜடேஜா 117 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 73 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
மோடி போட்ட பதிவை ஷேர் செய்து கொந்தளித்த சேவாக்… என்ன நடந்தது?
Aswin in Ind Vs Bang

இதனையடுத்து அஸ்வின் 113 ரன்கள் எடுத்ததற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது 2023 – 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடர்தான் அஸ்வினின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்குமாம். அதன்பின்னர் அவர் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பார்த்தால், அஸ்வின் சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி போட்டி இதுவே என்று ரசிகர்கள் கணிக்கின்றனர். ஆகையால்தான் அஸ்வின் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடியிருக்கிறார் என்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஆனால், அஸ்வின் ஓய்வைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடருக்கு பின்னரே வெளியிடப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com