மோடி போட்ட பதிவை ஷேர் செய்து கொந்தளித்த சேவாக்… என்ன நடந்தது?

Sehwag about Modi's tweet
Sehwag and Modi
Published on

மூன்று மாதத்திற்கு முன்னர் மோடி போட்ட பதிவை இப்போது ஷேர் செய்து கொந்தளித்த சேவாக், சிறிது நேரத்தில் டெலிட் செய்தது ஏன் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் 19ம் தேதி முன்னர் பிரதமர் மோடி நாட்டிலுள்ள தனியார் வங்கிகள் வளர்ச்சி குறித்து ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதனை சேவாக் தற்போது ஷேர் செய்து தனது குமுறலை வெளிபடுத்தியுள்ளார்.

அதாவது தன்னுடைய ஊழியர் ஒருவர் அவருடைய சொந்த நிலத்தை விற்றதன் மூலம் 1 கோடி ரூபாயை பெற்றிருக்கிறார் என்றும், அதில் சுமார் 80 லட்சம் ரூபாய்க்கு மூன்று பொது வங்கிகளில் பங்குகளை தனது ஊழியர் வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். கனரா வங்கியின் ஒரு பங்கு 120 ரூபாய்க்கும்,பேங்க் ஆப் பரோடாவின் ஒரு பங்கு 286 ரூபாய்க்கும், யூனியன் வங்கியின் ஒரு பங்கு 143 ரூபாய் க்கும் என அந்த நபர் வாங்கியதாக சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

சேவாக்கின் ஊழியர் மோடி போட்ட பதிவை நம்பி அந்த மூன்று பொது  வங்கிகளின் பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளதாகவும் சேவாக் கூறியுள்ளார். ஆனால் கடந்த மூன்று மாதத்தில் அவருடைய பங்கின் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்துவிட்டதாகவும் பொது வங்கிகளின் பங்குகள் 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்தால் மட்டுமே தமது ஊழியர் முதலீடு செய்த பணத்தையாவது அவரால் திரும்ப பெற முடியும் என்றும் ஷேவாக் கூறியுள்ளார். மேலும் தங்களது நண்பர்களையும் முதலீடு  செய்யக்கோரி அவர் கூறியுள்ளாராம்.

இதையும் படியுங்கள்:
News 5 – (19.09.2024) நட்சத்திர வீரர்கள் தடுமாற்றம்; சதம் விளாசிய ரவி அஷ்வின்!
Sehwag about Modi's tweet

பிரதமர் மோடி பொது வங்கிகள் குறித்து போட்ட கருத்துக்குப் பிறகு மூன்று மாதங்கள் கழித்தும் பொது வங்கிகளின் பங்குகள் கொஞ்சம் கூட உயரவில்லை என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.

 நிஃப்டி 10 சதவீதம் வரை உயர்ந்த போது வங்கிகளின் பங்கு மட்டும் அடி பாதாளத்திற்கு போனதாகவும், அரசு பொது வங்கிகளை பிரபலபடுத்துவதற்காகவே அந்தப் பதிவைப் போட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ஊழியர் இதனை நம்பி பெரிய தொகையை முதலீடு செய்து கையில் ஒன்றும் இல்லாமல் பயத்துடன் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவு வேகமாக பகிரப்பட்டு வந்த நிலையில், சேவாக் தனது பக்கத்தில் அதை டெலிட் செய்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com