இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி!

Ind Vs Eng 2nd Test Match.
Ind Vs Eng 2nd Test Match.Imge credit: NDTV Sports

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணியின் மேல் பல விமர்சனங்கள் எழுந்தவன்னம் இருந்தன. இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் தடுமாறியது. இதனால் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் யுக்திகளைக் கண்டுப்பிடித்து கடுமையாக பயிற்சி செய்து வந்தது.  

இதனையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் தேதி ஆரம்பித்து இன்று முடிவடைந்தது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தான் களமிறங்கியது. இருப்பினும் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி மோசமாக பேட்டிங் செய்தது.

இதனால் இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் தோல்வியை சந்திக்கும் என்று ரசிகர்கள் கணித்த நேரம், ஜெய்ஸ்வால் தனி ஆளாக நின்று இரட்டை சதம் அடித்தார். இதனால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் மொத்த 396 ரன்கள் குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 253 ரன்களே எடுத்தது. இந்த இன்னிங்ஸில் பும்ரா 6 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்தை 300 ரன்கள் கூட எடுக்கவிடாமல் சிறப்பாக பந்து வீசினார்.

இதையும் படியுங்கள்:
மீண்டு எழுந்த பென் ஸ்டோக்ஸ், துவண்டு விழுந்த ரோஹித் சர்மா!
Ind Vs Eng 2nd Test Match.

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 255 ரன்களைக் குவித்தது. இந்த இன்னிங்ஸில் வெகு நாட்களாக தடுமாறிக் கொண்டிருந்த கில் சதம் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இறுதி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இங்கிலாந்து அணியிலிருந்து ஓப்பனராக களமிறங்கிய ஜாக் கிரோலி 73 ரன்கள் சேர்த்தார். டாம் ஹார்ட்லே 36 ரன்கள் சேர்த்தார். அதேபோல் பூம்ராவும் அஸ்வினும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்து அணியால் 292 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com