அசத்தலான கம்பேக் கொடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிய சிராஜ்!

Siraj
Siraj

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இங்கிலாந்து அணி பேட்டிங்கில் வெறித்தனமாக விளையாடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது சிராஜின் கம்பேக்கில் திணறிக்கொண்டு வருகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 207 ரன்களைக் குவித்திருந்தது. ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அஸ்வின் அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் ஆட்டத்தை விட்டு விலகினார். இதனால் மூன்றாவது நாளில் இந்திய அணி 2 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தொடங்கியது. குறிப்பாக சிராஜ் முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

நேற்று ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும் இன்றைய ஆட்டத்தை மிகவும் சிறப்பாக விளையாடினார். பென் டக்கெட் ஆட்டமிழந்து வெளியேறிய பின் அடுத்து வந்த பேட்ஸ்மேன்களை கொஞ்சம் கூட ரன் எடுக்க விடாமல் அட்டாக் செய்து கொண்டே  இருந்தார். இதனால் அங்கு என்ன நடக்கிறது என்றே இங்கிலாந்து வீரர்களால் கணிக்கக்கூட முடியாத அளவிற்கு அவர்களைத் திணறும்படி செய்துவிட்டார் சிராஜ். பின்னர் பென் ஃபோக்ஸ், ரெஹான் அஹ்மத் மற்றும் ஆண்டர்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை சில நிமிடங்கள் இடைவெளியிலேயே வீழ்த்தி மீண்டும் இந்திய அணியை வெற்றி பாதையில் அழைத்துச் சென்றார்.

இதனால் 21.2 ஓவர்களில் 84 ரன்களை மட்டுமே கொடுத்த சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபராமாக விளையாடினார். இறுதியில் இங்கிலாந்து அணியால் முதல் இன்னிங்ஸில் 319 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 183/1 என்ற நிலையில் ஆடி வருகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இதையும் படியுங்கள்:
டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனைப் படைத்த Kane Williamson!
Siraj

அஸ்வின் இல்லாததை உணர்ந்து சிறப்பாக விளையாடிய சிராஜ், முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் கூட விக்கெட் எடுக்க முடியவில்லையே என்று விமர்சித்த வாய்களை அடைக்கும்படி செய்துவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com