டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனைப் படைத்த Kane Williamson!

Kane Williamson
Kane Williamson

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் ஒரு சதம் அடித்து குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கும் இடைய நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் முடிந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் கேன் வில்லியம்சனின் சதம்தான். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கேன் வில்லியம்சன் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தார். இது டெஸ்ட் தொடர்களில் இவர் அடித்த 32 வது சதமாகும். இதன்மூலம் டெஸ்ட் தொடர்களில் குறைந்த இன்னிங்ஸில் அதிக சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் கேன் வில்லியம்சன்.

முன்னதாக ஸ்டீவ் ஸ்மித் 174 இன்னிங்ஸில் 32 சதம் அடித்து சாதனையாளராகத் திகழ்ந்தார். ஆனால் கேன் அந்த சாதனையை முறியடித்தார். ஆம்! கேன் வெறும் 172 இன்னிங்ஸில் 32 சதம் அடித்து ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளினார். அதுமட்டமல்லாது, கேன் விளையாடிய கடைசி 7 டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்கள் அடித்து டெஸ்ட் தொடரின் கதாநாயகனாக மாறி வருகிறார்.

அந்தவகையில் மிகக் குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்த வீரர்களைப் பற்றி பார்ப்போம். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனுக்கு அடுத்து ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். அவருக்கு அடுத்து முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பாண்டிங் 176 இன்னிங்ஸில் 32 சதங்கள் அடித்துள்ளார். நான்காவது இடத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யுனிஸ் கான் 183 இன்னிங்ஸில் 32 சதங்கள் அடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
3 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் Devdutt Padikkal!
Kane Williamson

நியூசிலாந்து அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 242 ரன்கள் எடுத்தது. ஆனால் நியூசிலாந்து அணி வெறும் 211 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் கேன் சதம் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com