Ind Vs NZ: சதம் அடித்த சர்பராஸ் கான்… தொடரின் முதல் சதம்!

Sarfaraz Khan
Sarfaraz Khan
Published on

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சர்பராஸ் கான் சதம் அடித்திருக்கிறார். இந்த தொடரில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. சர்பராஸ் கான், விராட் கோலி, கேல்.எல்.ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் என அனைவரும் டக் அவுட்டாகி வெளியேறினர்.

இதனால், இந்திய அணியின் இந்த ஆட்டத்தைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்தது. தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மோசமாக விளையாடியதால், இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்கோர் எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்தவகையில் விராட் கோலி 70 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரோஹித் 52 ரன்களும், ரிஷப் பண்ட் 53 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து சர்பராஸ் கான் 125 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடி வந்தார். வெறும் 110 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இதனால், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 344 ரன்கள் எடுத்தது.

இதையும் படியுங்கள்:
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நுழைந்தது நியூசிலாந்து!
Sarfaraz Khan

இந்த ஸ்கோருக்கு சர்பராஸ் கானின் ரன்களே உதவியாக இருந்தது. முதலில் கில்லே விளையாடவிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டதால், சர்பராஸ் கான் அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டார். முதல் இன்னிங்ஸில் சரியாக விளையாடவில்லை என்பதால், அவர் தனது வாய்ப்பை சரி வர பயன்படுத்திக்கொள்ள இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து இந்திய அணியின் மோசமான நிலையிலிருந்து காப்பாற்றியிருக்கிறார். மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல்முறை சதம் அடித்த வீரரும் இவர்தான்.  

தற்போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com