உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நுழைந்தது நியூசிலாந்து!

New Zealand - ICC Women's T20 World Cup
New Zealand - ICC Women's T20 World Cup
Published on

துபாயில் நடைபெறும் ஐசிசி டி20 மகளிர் உலகக்கோப்பைக்கான இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று அக்.18 அன்று நடைபெற்றது. நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் மோதினர். இதற்கு முன்னர் 22 முறை நியூசிலாந்து - மேற்கிந்திய அணிகள் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக 17 போட்டிகளில் நியூசிலாந்தும் 5 போட்டிகளில் மேற்கிந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இம்முறை மேற்கிந்திய அணி மிகவும் பலமாக இருந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சோஃபி டிவைன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்காக சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிலிம்மர் ஆகியோர் ஆட்டத்தை துவங்கினர். மேற்கிந்திய அணியின் சினெல்லே ஹென்றி முதல் ஓவரை வீசினார். தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் நிதானமாக விளையாடினர். 8 வது ஓவரில் பார்ட்னர்ஷிப் 48 ரன்களை கடந்த போது சுசி பேட்ஸ் 28 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மெலி கேர் 7 ரன்களுடன் வெளியேற ஜார்ஜியா 33 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடி வெளியேறிக் கொண்டிருந்தனர். ஆட்ட நேர முடிவில் 128/9 ரன்களை எடுத்தது நியூசிலாந்து அணி. மேற்கிந்திய அணியின் சார்பாக சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார் டீன்டிரா டாட்டின். அபி பிளட்சர் தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

129 ரன்களை துரத்திய மேற்கிந்திய அணியில் ஹேலி மாத்யூஸ், கியானா ஜோசப் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். கியானா 12 ரன்களிலும் ஹேலி 15 ரன்களிலும் அவுட்டாகி தினற ஆரம்பித்தனர். பவுலிங்கில் அசத்திய டீன்டிரா, அபி பேட்டிங்கிலும் அசத்தி அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். டீன்டிரா 33 ரன்களும் அபி 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இலக்கை துரத்திய மேற்கிந்திய அணி இறுதி ஓவர்களில் தேவையான ரன்களை எடுக்க முடியாமல் தவித்தனர். இறுதியில் அவர்களால் 120/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். நியூசிலாந்து சார்பில் ஈடன் கார்சன் 3 விக்கட்டுக்களையும், மெலி கேர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையும் படியுங்கள்:
டெஸ்ட் கிரிக்கெட் - இந்த ரிகார்டுகள் மாறுமா?
New Zealand - ICC Women's T20 World Cup

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 2014க்குப் பிறகு, 14 ஆண்டுகள் காத்திருந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். 2009 மற்றும் 2010 இல் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது, ஆயினும் இறுதிப் போட்டிகளில் தோல்வியையே தழுவி உள்ளது. அதனால், இம்முறை வெற்றிக்காக கடினமாக போராடும். இறுதிப் போட்டியில் வலுவான தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய ஆணியுடன் மோதி கோப்பையை தவற விட்டிருந்த தென் ஆப்பிரிக்க அணி இம்முறை ஆஸ்திரேலியாவை இறுதி போட்டிக்கு முன்னரே விடாமல் வெளியேற்றி பழி தீர்த்தது. இரு அணிகளும் முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்ல கடினமாக போராடுவார்கள். 2009க்குப் பிறகு முதன்முறையாக ஆஸ்திரேலியா இல்லாமல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com