IND Vs SA டி-20.
IND Vs SA டி-20.

IND Vs SA டி-20: மழையால் 2-வது ஆட்டமும் ரத்தாகுமா?

டி-20 உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேயாவுக்கு எதிரான டி-20 போட்டித் தொடரை அடுத்து இந்திய அணிக்கு 6 சர்வதேச போட்டிகள் மட்டுமே உள்ளன. அதற்குள் இந்தியா தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடைபெற இருந்த முதல் ஒரு நாள் டி-20 போட்டி மழையால் தடைபட்டது. இடைவிடாத மழையால் டாஸ்கூட போட முடியவில்லை.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் டி-20 போட்டி இன்று கெபர்ஹாவில் (முன்பு போர்ட் எலிசபெத்) நடைபெறுகிறது. இந்த போட்டியும் மழையால் தடைபடலாம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை லேசான மழை இருந்தால் ஆட்டம் தாமதமாக தொடங்கலாம்.

இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா தனது வலிமையான லெவன் அணியுடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன்கில் இருவரும் ஆட்டத்தை தொடங்க, அவர்களுடன் ருதுராஜ் கெய்க்வேடும் சேர்ந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் சிறப்பாக விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் ரவி விஷ்ணோய் அணியில் இடம்பெறுவார் எனத் தெரிகிறது.

ரிங்கு சிங்கைப் போன்ற இளம் வீர்ர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாகவே இருக்கும். தென்னாப்பிரிக்காவின் வித்தியாசமான பருவநிலையில் இளம் வீர்ர்கள் இந்தியாவின் தலையெழுத்தை எப்படி மாற்றிமைக்கப் போகிறார்கள் என்பதை ஆவலுடன் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை ரீஸ்ஸா ஹென்டிரிக்ஸ் மற்றும் மாத்யூ ப்ரீட்ஸ்கி தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். டிரிஸ்டன் ஸ்டப்ஸ், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தலாம். மார்கோ ஜான்சனைவிட ஆண்ட்லி பெஹ்லுக்வாயோ சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.

கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஓவல் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம் என்று சொல்லபடுகிறது. ஒருவேளை லேசான மழை இருக்குமானால் அது சீமர்களுக்கு சாதகமாக அமையலாம்.

இதையும் படியுங்கள்:
இதனால் தான் இந்தியா உலகக் கோப்பையை தவறவிட்டது!
IND Vs SA டி-20.

தென்னாப்பிரிக்க அணி: ரீஸ்ஸா ஹென்டிரிக்ஸ், மாத்யூ பிரீட்ஸ்கி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்), அய்டன் மார்கரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாஸன், டேவிட் மில்லர், ஆண்டிலி பெஹ்லுகேவாயோ, கேசவ் மகாராஜ், ஜெரால்டு கோட்ஸீ, நாந்த்ரே பர்கர் மற்றும் டப்ரைஸ் ஷம்சி.

இந்திய அணி: ஜெய்ஸ்வால், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார், ரவி விஷ்ணோய், முகமது சிராஜ் மற்றும் அர்ஷதீப் சிங்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com