இம்மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஒருநாள் போட்டியில் ரோஹித், இந்திய அணியின் கேப்டனாக செயல்படப் போவதில்லை என்று செய்திகள் வந்துள்ளன.
இந்திய அணி இப்போதுதான் பல மைல் தூரம் பயணித்து டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றி இப்போதுதான் நாடு திரும்பியிருக்கிறது. அதற்குள், இந்த மாதம் இறுதியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடைபெறவிருக்கிறது. முதலில் இப்போட்டியில் ரோஹித் மற்றும் விராட் போன்ற சீனியர் வீரர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வந்த தகவல்படி சீனியர் வீரர்கள் இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை.
இலங்கையுடனான போட்டிக்கு பிறகு பல கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் மூத்த வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காக இலங்கை தொடரில் அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தான் கேப்டன் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ள நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் பங்கேற்க மாட்டேன் என கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு பதில் ஹார்திக் பாண்டியா அல்லது கே.எல். ராகுல் என இரண்டு பேர் கேப்டன் பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியிருக்க சூழ்நிலையில், ஹார்திக் பாண்டியா முன்னதாக டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். ஆனால், ஐபிஎல் தொடருக்குப் பின்னர் இவரின் கேப்டன் திறமைக்கு கேள்வி எழுப்பட்டது.
ஆனால், கே.எல்.ராகுல் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரிலும் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி அபாரமாக செயல்பட்டது.
அது மட்டுமில்லாமல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் வரப் போகிறார் என கருதப்படுகிறது. கௌதம் கம்பீர், கே எல் ராகுலின் உற்ற நண்பராக இருக்கிறார். இருவரும் இணைந்து ஏற்கனவே பணியாற்றியிருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் அவருக்கு ரசிகர்களின் முழு ஆதரவு கிடைத்தது. ஆனால், அதன்பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.