249 ரன்கள் அடித்தும் அதிர்ச்சி தோல்வி: இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

சஞ்சு சாம்சன், திலக் வர்மா போராட்டம் வீண்; ராஞ்சியில் கோட்டை விட்ட இந்தியா!
Ind vs Wi
ind vs wicricket Addictor
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

நேற்று ராஞ்சியில் உள்ள ஜெஎஸ்சிஏ சர்வதேச விளையாட்டு மைதானத்தில், இந்திய மற்றும் மே.இந்திய தீவுகள் அணி மோதிய 2 வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது. முதலில் தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி போதிலும், ஆட்டம் போதுமானதாக இல்லை.

இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 20 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் , சஞ்சு சாம்சன் நின்று அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினார். 41 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டர்களை விளாசிய அவர் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் அதிரடியாக 22 பந்துகளில் 43 ரன்களை அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யரும்(40) தனது அதிரடியை காட்ட அணியின் ஸ்கோர் ஸ்கோர் 200 ஐ தாண்டியது.

திலக் வர்மா(44) ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். இந்திய அணியை சேர்ந்த வீரர்கள், ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதம் அடிக்கும் வாய்ப்பினை நூலிழையில் தவறவிட்டிருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 என்ற இமாலய ஸ்கோரை அடைந்தது.

250 என்ற கடினமான இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், அந்த இழப்பு அந்த அணியின் வேகத்தை எந்த இடத்திலும் பாதிக்கவில்லை. ஷாய் ஹோப் ஒருபுறம் நிலைத்து நின்று இந்திய அணியின் பந்துவீச்சுகளை நொறுக்கி தள்ளினார். 45 பந்துகளில் 9 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 102 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ரூதர்போர்டு சரியான ஒத்துழைப்பை வழங்கி 84 ரன்களை குவித்தார். 18.3 ஓவர்கள் இறுதியில் ரோமாரியா ஷெப்பர்ட் 33 ரன்களை விளாச மே இந்திய தீவுகள் அணி 252 ரன்களைக் கடந்து வெற்றி பெற்றது.

shai hope
Shai hope Mint

இந்திய அணி இமாலய இலக்கை மேற்கிந்திய தீவுகளுக்கு நிர்ணயித்திருந்தாலும் அவர்கள் 9 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் வெற்றி பெற்றனர். சில தினங்களுக்கு முன்பு தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர்களான பிராவோ மற்றும் கெயில் ஆகியோர், எதிர்காலத்தில் ஒரு நாள் போட்டிகளில் 500 ரன்களை விரட்டி வெற்றி பெறுவது சாதாரண ஒன்றாக மாறும் என்று கூறியிருந்தனர். அதே போல் டி20 போட்டிகளில் 20 ஓவர்களுக்குள் 250 ரன்கள் எடுப்பது சாதாரணமாக ஆகும்போது ,50 ஓவர்களில் 500 ரன்களை கடப்பது விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது.

தற்போதைய மைதானங்கள் பேட்ஸ்மேன்களுக்கு தகுந்தவாறு பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளதால், அதிக ரன்கள் குவிப்பது சாதாரணமான ஒன்றாகி விட்டது. இந்த மைதானங்களில் பந்துவீச்சாளர்கள் மிகவும் திணறுகின்றனர். குறிப்பாக இரண்டு அணியின் பந்துவீச்சாளர்களும் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியாமல் திணறிவிட்டனர். இந்த தோல்விக்கு பனிப்பொழிவு ஒரு முக்கிய காரணமாக இருந்தது, என்று இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கண்பிடித்துள்ளார். நடப்பு தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com