சரித்திரம் படைத்த இந்திய பெண்கள்: 44 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ஹாக்கியில் தங்கம்!

லால்ரெம்சியாமியின் அபாரமான கோலால் நடப்பு சாம்பியன் சீனாவை வீழ்த்தி 44 ஆண்டுகளுக்கு பின் ஆசிய விளையாட்டுத் தங்கம் வென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி.
Indian womens hockey team won Gold
indian womens Hockey Facebook
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

இந்திய மகளிர் ஹாக்கி தன் விளையாட்டு வரலாற்றில், 44 ஆண்டு கால மிக நீண்ட காத்திருப்பிற்கு பின், மகத்தான ஒரு வெற்றியை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மகளிர் ஹாக்கி அணி செயல்பட்டுள்ளது. ஜப்பானின் கிஃபு மாநிலத்தில் உள்ள பசுமை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், உலகத்தர வரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி , 4 வது இடத்தில் உள்ள வலிமையான சீன அணியை எதிர்கொண்டது.

இந்திய அணிக்காக தனது 200-வது சர்வதேசப் போட்டியில் ஆடிய வீராங்கனை லால்ரெம்சியாமி, ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் சிறப்பான கோலை அடித்தார். இந்த கோலை அடிக்க கேப்டன் சலிமா டெட்டே ஆதரவாக செயல்பட்டு பந்தை அவர் பக்கம் உந்தினார். கோல் அடித்ததை தொடர்ந்து ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக செல்ல தொடங்கியது.

சீன அணி தொடர்ச்சியாக கோலடிப்பதற்கு முயற்சி கொண்டே இருந்தது. இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் சீனாவின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை எல்லாம் தடுத்துக் கொண்டே வந்தது. இந்திய கோல்கீப்பர் சவிதா புனியா , சீனாவின் கோலை தடுத்து வெற்றிக்கு பங்களித்தார்.சீனா அடித்த முக்கியமான பெனால்டி ஷாட்டையும், பல பெனால்டி கார்னர்களையும் தடுத்து, கோல் எதுவும் அடிக்க விடாமல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில், நடப்பு சாம்பியனாக இருந்த சீனாவை வீழ்த்தி சாதனை படைத்தது. இந்த வரலாற்று வெற்றியின் மூலம் இந்திய அணி மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்கத்தை வென்றுள்ளது. இதற்கு முன்னர் இந்தியா 1982 ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டிகளில் தான் மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்தது.

அதற்கு பின்னர் நடைபெற்ற எந்த ஆசியன் விளையாட்டுப் போட்டியிலும் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றதில்லை. ஆனால், அதே நேரம் பலமுறை இந்திய அணி தங்கம் வெல்ல வேண்டிய இறுதிப்போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

indian hockey team
ind womens Hockey Image credit: News 18

1986: வெண்கலப் பதக்கம்

​1998: வெள்ளிப் பதக்கம்

​2006 :வெண்கலப் பதக்கம்

2014: வெண்கலப் பதக்கம்

​2018: வெள்ளிப் பதக்கம்

​2023: வெண்கலப் பதக்கம்

இந்திய அணி தங்கம் வெல்ல கோல் அடுத்த லால்ரெம்சியாமி , கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச ஹாக்கி போட்டிகளில் அறிமுகமானார். அதிலிருந்து இந்திய அணியின் நட்சத்திரமாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற காரணமாக இருக்கிறார். ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி உள்ளார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி , 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் குறைவான தங்கத்தையே பெற்றிருப்பதால், மகளிர் ஹாக்கியில் பெற்றுள்ள தங்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்றைய நாள் முடிவில் இந்தியா இதுவரை 16 தங்கப் பதக்கங்களுடன் 5 இடத்தில் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com