2024 டி-20 போட்டிகள்: ரோஹித், விராட் கோலிக்கு கடைசி ஆண்டா?

Rohit & Virat Kohli.
Rohit & Virat Kohli.

2023 ஆம் ஆண்டில் இந்திய அணி அனைத்து தரப்பு போட்டிகளிடம் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி, உலகக் கோப்பை போட்டியை ஏற்று நடத்திய போதிலும் நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது. இந்திய அணியின் நட்சத்திர வீர்ர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு 2023 ஆம் ஆண்டு வலுவகாகவே இருந்தது. அவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டம் 2024 ஆம் ஆண்டிலும் தொடரும் என்று நம்பலாம்.

டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவர்களுக்கு இறுதி ஆண்டாக இருக்கும் என்பதால் ரோஹித், விராட் கோலி இருவரும் கவனம் செலுத்தி ஆடுவார்கள் என எதிர்பார்க்கலாம். 2024 ஆம் ஆண்டில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளது. எனவே இந்திய அணிக்கு இது முக்கியமான ஆண்டாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது 3-வது மற்றும் 4-ஆம் நிலை ஆட்டக்காரர்களாக புஜாரா மற்றும் ரஹானேவுக்கு பதிலாக சுப்மன்கில், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் புதுமுகங்கள் பங்கேற்றனர். இது இளம் வீர்ர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பாகும். இந்தியா இந்த ஆண்டு மூன்று முக்கியப் போட்டிகளில் விளையாட உள்ளது. பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஜனவரியில் இந்தியா வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை இங்கிலாந்து முதல் முறையாக எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் இங்கிலாந்தில் ஒரே ஒருமுறை மட்டும் மோதியுள்ளன. அந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. அந்த போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா கேப்டனாக இருந்தார். இந்தியாவில் நடைபெறும் போட்டியில் நிலைமை தலைகீழாக மாறும் என்று நம்பலாம். கடந்த ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் பென்ஸ்டோக்ஸ்தான் இங்கிலாந்து அணிக்கு தலைமை வகித்து வந்துள்ளார். இங்கிலாந்து அணி உலகின் சிறந்த அணிகளில் ஒன்றா என்பது இந்தியாவுடன் நடைபெறும் போட்டிகள் மூலம் தெரிந்துவிடும்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் (ஜன. 25-29) ஹைதராபாதிலும், 2-வது டெஸ்ட் (பிப். 2முதல் 6 வரை) விசாகப்பட்டினத்திலும், 3-வது டெஸ்ட் (பிப்.15-19) ராஜ்கோட்டிலும், 4 வது டெஸ்ட் (பிப். 23-27) ராஞ்சியிலும், ஐந்தாவது கடைசி டெஸ்ட் மார்ச் 7 முதல் 11 வரை தர்மசாலாவிலும் நடைபெற உள்ளது.

வரும் ஜூன் மாதம் கரீபியன் தீவுகளிலும், அமெரிக்காவிலும் டி20 உலகப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்திய அணியில் பங்கேற்பவர்கள் பற்றிய விவரங்கள் முழுமையாகத் தெரியவரவில்லை. அதற்கு முன்னதாக இந்தியா 3 டி20 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் திறமையை வெளிப்படும் வீர்ர்கள் அடிப்படையில் உலக கோப்பை அணி இருக்கும் என்று தெரிகிறது.

2022 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய தோல்வி அடைந்த பிறகு ரோஹித் சர்மா டி20 போட்டியில் விளையாடவில்லை. போட்டியில் விளையாடுவரா என்பது குறித்து ரோஹித்தோ அல்லது பி.சி.சி.ஐ. எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் ரசிகர்களிடையே குழப்பம் நிலவியது.

இதையும் படியுங்கள்:
அதானி குழுமத்திற்கு கடன் கொடுக்கப் போட்டி போடும் சர்வதேச வங்கிகள்!
Rohit & Virat Kohli.

ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்தார். ஆனால் உலக கோப்பை போட்டியில் கணுக்காலில் காயமடைந்த அவர் எப்போது குணமடைந்து அணிக்கு திரும்புவார் என்பது தெரியவில்லை.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்று சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com