இந்திய அணிக்கு ஜடேஜா தேவையா? – சுனில் அளித்த பதில்!

Sunil and Jadeja
Sunil and Jadeja
Published on

இந்திய அணியின் தூணாக விளங்கும் வீரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா அணிக்குத் தேவையா என்பதுபோல பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அதற்கு சுனில் கவாஸ்கர் சூப்பரான பதிலை அளித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்குப்பெறும் அரையிறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது. இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதி, அதில் வெற்றிபெற்றால் மட்டுமே இறுதிபோட்டிக்கு தகுதிபெறும்.

கடந்த 2022ம் ஆண்டு அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி படுதோல்வியடைந்தது. ஆகையால், இம்முறை இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் அவ்வளவு எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்திய கிரிக்கெட் வட்டாரத்தினர், இங்கிலாந்து அணியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தும், வெற்றிபெறுவதற்கு சில வழிகளும் கூறி வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜடேஜா இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 10 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டையும், 3 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 16 ரன்களையும் மட்டுமே சேர்த்திருக்கிறார்.

இவரை ஒப்பிடும் போது அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்கி இருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட யுவராஜ் சிங்கிற்கு சமமான பங்களிப்பை அளித்து வருகிறார்.
ஆகையால் ஜடேஜா பக்கம்தான் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. ஜடேஜாவை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கலாம் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சுனில் பேசியதாவது, “ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங், பவுலிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் ஜடேஜாவிடம் சிறந்த அனுபவம் இருக்கிறது. அவருக்கு கிடைத்துள்ள சின்ன சின்ன வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஃபீல்டிங்கில் மட்டும் 20 முதல் 30 ரன்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
யாருமே எங்களை நம்பவில்லை… இப்போ பாத்தீங்களா? – ரஷித் கான் நெகிழ்ச்சி!
Sunil and Jadeja

அவரின் ஃபீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் மற்றும் ரன் அவுட்களை யாராலும் மறக்க முடியாது. அவரின் ஃபீல்டிங்கால் 30 ரன்களை தடுத்துள்ள நிலையில், அவரின் பேட்டிங் மற்றும் பவுலிங் பங்களிப்புகள் இந்திய அணி கூடுதல் சாதகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஜடேஜாவின் இடத்தை கேள்வி எழுப்புவது குறித்து யாரும் சிந்திக்க கூட தேவையில்லை.” என்று பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணியுடன் மோதி, இந்திய அணி வெற்றிபெறுவது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில், 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இதேபோல்தான் இந்திய அணி தொடக்கத்திலிருந்து வெற்றிபெற்று இறுதிபோட்டியில் தோற்றது. ஆகையால்தான் முன்னாள் வீரர்கள் அனைவரும் அறிவுரை கூறி வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com