யாருமே எங்களை நம்பவில்லை… இப்போ பாத்தீங்களா? – ரஷித் கான் நெகிழ்ச்சி!

Rashid Khan
Rashid Khan
Published on

ஆஃப்கானிஸ்தான் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியை குறித்து அணியின் கேப்டன் ரஷித் கான் பேசியுள்ளார். அதாவது ஒரு நபரைத் தவிர்த்து வேறு யாருமே எங்களை நம்பவில்லை என்று பேசியிருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு அடுத்து அரையிறுதி போட்டிக்கள் நடைபெறும். அதில் எந்த அணிகள் போட்டிப்போட உள்ளன என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு. அந்தவகையில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது. இந்தப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ரஷித் கான் பேசியுள்ளார்.

"அரையிறுதிக்கு முன்னேறியது கிட்டத்தட்ட எங்களுக்கு ஒரு கனவு போல் உள்ளது. இதற்கு நாங்கள் டி20 உலகக்கோப்பை தொடரை எப்படி தொடங்கினோம் என்பதும் காரணம். (முதலில் ஆஃப்கானிஸ்தான் அணி தடுமாறியது).

நியூசிலாந்து அணியை வீழ்த்திய பின்னரே எங்களுக்கு நம்பிக்கை வந்தது. ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் மகிழ்ச்சியில் இருப்பார்கள். நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்று பிரையன் லாரா மட்டுமே கணித்திருந்தார். அவர் சொன்னது சரியென்று நாங்கள் நிரூபித்துள்ளோம்.

இந்த தொடருக்கு முன்பாக அவரை சந்தித்த போது, நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டு வர மாட்டோம் என்றேன்.

இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரை, மழையை நம்பாமல் 100 சதவித உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் எங்கள் அணியில் சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டது. குறிப்பாக பவுலிங்கில், திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் திறமை இருந்தால், சாதிக்க முடியும். மனதளவில் நாங்கள் அனைத்திற்கும் தயாராகவே இருந்தோம்.

இதையும் படியுங்கள்:
இடைவிடாத முயற்சிக்கு எடுத்துக்காட்டாய் திகழும் ஆப்கானிஸ்தான் அணி!
Rashid Khan

டி20 கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளை எடுத்து, 20 ஓவர்களையும் விளையாட முயற்சிக்க வேண்டும். இந்த போட்டியில் எங்களுக்கும் அதுதான் தேவையாக இருந்தது. இது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. அரையிறுதி சுற்றிலும் தெளிவான மனநிலையில் விளையாட வேண்டும்.” என்று பேசியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com