பேட்மின்டன் ஓபன் 2024: காலிறுதியில் பிரணாய், சாத்விக்-சிராக் ஜோடி!

Badminton Open 2024.
Badminton Open 2024.

புதுதில்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் 2024 பேட்மின்டன் ஒற்றையர் போட்டியில் நட்சத்திர ஆட்டக்காரரான ஹெச்.எஸ். பிரணாய், சக வீர்ரான பிரியான்ஷு ரஜாவத்தை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தார்.

எனினும் 8 ஆம் நிலை ஆட்டக்காரரான பிரணாய் ராய், ரஜாவத்தை வீழ்த்த கடுமையாக போராட வேண்டியிருந்தது. இறுதியில் பிரணாய் 20-22, 21-14, 21-14 என்ற செட்கணக்கில் வென்றார். முதல் சுற்றில் பிரியன்ஷு ரஜாவத், லக்க்ஷயா சென்னை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் செட்டில் ரஜாவத் முன்னிலை பெற்ற போதிலும், அடுத்தடுத்த செட்டுகள் அவருக்கு சாதகமாக இல்லை. பிரணாய் போட்டியில் வென்றபோதிலும் அவர் கடுமையாக போராட வேண்டியிருந்தது.

ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் களத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரணாய் ஒருவர் மட்டுமே.

இதனிடையே பேட்மிண்டன் விளையாட்டில் உலகின் 2 ஆம் நிலை ஆட்டக்கார்ர்களான சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடியினர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.க

முதல் சுற்றில் சீன தைபே ஜோடியான பாங் சி லீ மற்றும் பாங் ஜென் லீ ஜோடியை வெல்ல கடுமையாக போராடிய சிராக்-சாத்விக் ஜோடி, இரண்டாவது சுற்றில் லூ சிங் யாவ் மற்றும் யாங் போ ஹன் ஜோடியை 21-14, 21-15 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றனர்.

இதையும் படியுங்கள்:
மற்றவர்களுடன் நம் குழந்தைகளை ஒப்பிடுவதும், போட்டி போடச் செய்வதும் சரியா?
Badminton Open 2024.

காலிறுதியில் சிராக் மற்றும் சாத்விக் ஜோடி, டென்மார்க வீரர் கிம் அஸ்டிரப் மற்றும் ஆண்டர்ஸ் ஸ்காரப் ராஸ்முஸ்ஸென் ஜோடியை எதிர்கொள்ள விருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com