அகமதாபாத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: ராக்கெட் வேகத்தில் "சர்" ரென எகிறிய ஹோட்டல் ரூம் வாடகை!

அகமதாபாத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: ராக்கெட் வேகத்தில் "சர்" ரென எகிறிய ஹோட்டல் ரூம் வாடகை!

இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அகமதாபாத்தில் தற்போது ஹோட்டல் ரூம் வாடகைகள் கணிசமாக உயர்ந்து வருகிறது. விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்தாலும் பல நட்சத்திர ஓட்டல்களில் ரூம்கள் அனைத்தும் புக் ஆகி விட்டதாம்.

ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப் பட்டது.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்களிடையே தீ பற்றி கொள்ளும் . அதிலும் போட்டி இந்தியாவில்நடைபெறுகிறது என்றாலே கேட்கவே வேண்டாம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.

INDIAN TEAM
INDIAN TEAM

ரசிகர்களின் இந்த ஆர்வத்தினை பயன்படுத்தி பல நட்சத்திர ஓட்டல்களில் ரூம்கள் வாடகையினை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளது. அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதக்கூடிய வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் ரூம் வாடகைகளை தாறுமாறாக உயர்த்தியுள்ளன. 5 ஆயிரம் ரூபாய் வாடகை கொண்ட ரூம் வாடகை, அக்டோபர் 15-ந்தேதியன்று 10 மடங்கு அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ரூம்கள் புக் செய்யும் இணையதளம் மூலம் இந்த உயர்வு தெரியவந்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் குறித்து போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுமே ரசிகர்கள் அகமதாபாத் செல்வது குறித்து யோசிக்க ஆரம்பித்து விட்டனர். அகமதாபாத் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதனால் அன்றைய தினம் அகமதாபாத் ரசிகர்கள் படையால் திருவிழா போன்று ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வளவு விலை உயர்த்தப்பட்ட நிலையிலும் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாக தெரிகிறது. ஆடம்பர ஓட்டல்களில் ஒருநாள் ரூம் வாடகை 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை அகமதாபாத் நகரில் இருக்கிறது. தற்போது அந்த வாடகை 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

அகமதாபாத் நகரில் உள்ள ஐடிசி ஓட்டல்களின் வெல்கம் ஓட்டலில் ஜூலை 2-ந்தேதி ரூம் வாடகை 5,699 ரூபாய். அதுவே அக்டோபர் 15-ந்தேதி 71,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜி. ஹைவேயில் உள்ள ரெனாய்ஸ்சான்ஸ் அகமதாபாத் ஓட்டலில் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

அதுவே அக்டோபர் 15-ந்தேதி 90,679 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைடு பிளாசா ஓட்டல், ரூம் வாடகையை 36,180 ரூபாயாக உயர்த்தியுள்ளது. பட்ஜெட் விலையான 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com