India Vs Pakistan
India Vs Pakistan

India Pakistan Match: தீவிரவாத தாக்குதல் நடைபெறும் – வெளியான தகவலால் பகீர்!

Published on

டி20 உலக்கோப்பை தொடரில் அனைவருமே எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில், தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், பதற்றம் நிலவியிருக்கிறது.

டி20 உலகக்கோப்பை வரும் ஜூன் 2ம் தேதி தொடங்கவுள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் ஆகிய நாடுகளில்தான் அனைத்து உலகக்கோப்பை போட்டிகளும் நடைபெறுகின்றன. இதற்கான பணிகள், இரு நாடுகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் பயிற்சி போட்டிகளும் துவங்கிவிட்டன. இந்தநிலையில் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி வரும் ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதற்கென்று தனி மைதானம் தயாராகி வருகிறது.

இந்த போட்டியின் டிக்கெட் விலை ஒரு நபருக்கு அதிகபட்சம் 16 லட்சம் ரூபாய் வரையாகும். இதுபோன்ற பல ஸ்பெஷலான ஏற்பாடுகள் இந்தப் போட்டிக்கு செய்யப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போதே, இந்தியா பாகிஸ்தான் போட்டியில் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்று அனைவரையும் அச்சுறுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இது ஒரு கூட்டமான தாக்குதல் இல்லையாம். ஒரு தனி நபர் தாக்குதலாம். அதாவது, வெளிநாடுகளில் பொதுவாக கூட்டமாக இருக்கும் பகுதியில் தனிநபர் அங்கு சென்று தங்கள் டார்கெட்டை கொலை செய்வார். கொலை செய்தவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் கைது செய்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு தாக்குதல் தான் இம்முறை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், உலக நாடுகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவுக்கும், போட்டியை நடத்தும் அமெரிக்காவிற்கும்தான் பெரிய கலக்கமே.

இதையும் படியுங்கள்:
டி20 தொடரில் புதிய விதி… இந்தியாவின் லக் இதுலேயே தெரிஞ்சுருச்சேப்பா!
India Vs Pakistan

இதுகுறித்து ஐசிசி கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அல்லாமல் நியூயார்கில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்குமே தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கூடுதலாக 100 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு ரசிகர்களையும் சோதித்த பிறகு மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மைதானத்தை மட்டுமல்லாமல் மைதானத்தை சுற்றியும், வாகனங்கள் நிறுத்தும் இடம் என ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனி பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இந்த போட்டியை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நடத்த அமெரிக்க அதிகாரிகள் உறுதி அளித்து இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.“ என்று கூறியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com