மீண்டும் மோதவிருக்கும் இந்தியா பாகிஸ்தான்: எப்போ தெரியுமா?

India vs Pakistan
India vs Pakistan
Published on

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை மீண்டும் காண ஆவலாக இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களே! உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ஐசிசி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்‌.

தற்போது தான் 9வது டி20 உலக்கோப்பை நடந்து முடிந்துள்ளது. டி20-யில் உலக சாம்பியனான இந்திய அணி தனது வெற்றியை உலக நாடுகள் பொறாமை கொள்ளும் அளவிற்கு கொண்டாடி வருகிறது. இத்தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை மிகக் குறைந்த இலக்கை நிர்ணயித்து இந்தியா வெற்றி பெற்றது. பொதுவாக இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் உலகளவில் மிகப் பிரபலம். அவ்வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற இருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போகிறது.

மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் பாதுகாப்பு காரணமாக இந்திய அணி பங்கேற்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி இத்தொடர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

எப்போதும் ஐசிசி தொடர்களில் அதிக பரபரப்பு நிறைந்த போட்டியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தான் இருக்கும். அவ்வகையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மார்ச் 1 ஆம் தேதி பாகிஸ்தானை லாகூரில் எதிர்கொள்கிறது. இத்தொடர் ஒருநாள் போட்டியை அடிப்படையாகக் கொண்டது என்பதால், அன்றைய தினம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு விருந்து தான் என்பதில் ஐயமில்லை.

ஐசிசி ஒருநாள் போட்டி அட்டவணையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. இந்த எட்டு அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, மற்ற அணிகளுடன் மோதும். குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளும், குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் இடம் பிடித்துள்ளன. குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதையும் படியுங்கள்:
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள்... பகைமைப் பந்தயங்கள்! பசுமையான சுவாரஸ்யங்கள்!
India vs Pakistan

பாகிஸ்தானில் பாதுகாப்பு காரணமாக இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் லாகூரிலேயே நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் சென்று விளையாடுவது குறித்து பிசிசிஐ இன்னும் எந்தவித முடிவையும் எடுக்காத நிலையில், இந்திய அரசின் அனுமதி கிடைத்தால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து விட்டால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறலாம் எனத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com