இந்தியா vs இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டி: ஜோ ரூட் அதிரடியால் இந்தியா தோல்வி..!!

சோபியாவில் சறுக்கிய இந்தியா: ஜோ ரூட்டின் ஆக்ரோஷத்தால் தவிடுபொடியானது கனவு!
England won 2n odi
Joe root Cricinfo
Updated on

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஒரு நாள் தொடர் , இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது. நேற்று சோபியா கார்டனில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.

இந்தியா சார்பில் முதலில் களம் இறங்கிய ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் தொடக்கத்திலிருந்து மிகவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தனர். ரோகித் சர்மா 47 பந்துகளில் வெறும் 26 ரன்களை மட்டுமே அடித்தார். கில் சற்று வேகமாக விளையாடி 30 பந்துகளுக்கு 31 ரன் அடித்து இருந்தார். அடுத்து களம் இறங்கிய விராட் கோலி மிகச் சிறப்பாக தனது ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவர் நேற்றைய போட்டியில் அரை சதத்தை கடந்து 65 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் உயர தனது முக்கிய பங்களிப்பை கொடுத்தார்.

கோலிக்கு சரியான ஒத்துழைப்பை ஷ்ரேயாஸ் ஐயர் வழங்கினார். அவரும் இந்த போட்டியில் அரைசத்தினை கடந்தார். ஷ்ரேயாஸ் 2 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடித்து 66 ரன்களை கடந்தார். இவர்கள் இருவரும் இணைந்து அணி ஓரளவுக்கு ரன்களை எடுப்பதற்கு உதவினர். அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் விரைவிலேயே அணியின் அனைத்து விக்கெட்டுகளும் விழுந்து 44 ஓவரில், 234 என்ற சாதாரண ஸ்கோரையே குவிக்க முடிந்தது. இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

235 ரன்களை விரட்டத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே கோல்டன் டக் ஆகி பென் டக்கட் அதிர்ச்சி அளித்தார். அதை தொடர்ந்து ஜாக்கோப் பித்தல் 4 ரன்களில் வெளியேற , இங்கிலாந்து அணி சற்று தடுமாறு தொடங்கியது. ஆனால், ஆட்டத்தின் போக்கினை ஜோ ரூட் முற்றிலும் மாற்றி காட்டினார். மிகவும் நிதானமாக விளையாடிய ஜோ இறுதிவரை ஆட்டமிழக்காமல் 99 ரன்களைக் குறித்து இருந்தார்.

India loss 2nd odi
indian Batsman outHindustan Times

சதம் அடிக்கும் வாய்ப்பினை அவர் இழந்தாலும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முழு காரணமாக அவர் இருந்தார். ஆட்டத்தின் போக்கினை இந்தியாவிடம் இருந்து முற்றிலுமாக அவர் கைப்பற்றி இருந்தார். இங்கிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறிய அளவில் கொடுத்த ஒத்துழைப்பு காரணமாக , அந்த அணி வெற்றியை நோக்கி சென்றது. சாம் குர்ரன் 26 , வில் ஜாக்ஸ் 30 , கஸ் அட்கிங்சன் 23 ரன்கள் எடுக்க அணி 44.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமான இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவிக்க தவறியது , அனுபவம் வாய்ந்த ஒரு பந்துவீச்சாளரை மட்டுமே அணியில் வைத்திருப்பது, போன்ற காரணங்களினால் இந்த போட்டியின் வெற்றி வாய்ப்பை இழந்தது. அணியின் பின் வரிசை பேட்ஸ்மென்கள் விரைவிலேயே அவுட் ஆகி வெளியேறியதும் அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. தற்போது இங்கிலாந்து அணி ஒரு வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியல் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com