

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஏற்கனவே டி20 தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. அதைத் தொடர்ந்து 5 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாசை வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.
இந்த போட்டியில் பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணி நத்தையை விட மெதுவாக விளையாடியது. நியூசி பேட்ஸ்மேன்களின் வேகம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு இணையாக இருந்தது.ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 9 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். செய்பர்ட் மட்டும் தனி ஆளாக 38 ரன்கள் எடுத்து , இன்றைய போட்டியில் நியூசி அணியின் சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரர் ஆனார். நிக்கோலஸ் 9 ரன்களில் வெளியேற மிச்செல் 28 ரன்களை போராடி எடுத்தார்.
கிளன் பிலிப்ஸ் 30 ரன்களை குவிக்க, கடைசி விக்கெட்டான பிளேர் திக்னர் அதிரடியாக 34 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசி அணி 185 ஸ்கோரை அடித்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும் , குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி எதிரணியை கட்டுக்குள் வைத்தனர்.
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே ரோஹித் ஷர்மா அதிர்ச்சியை வைத்தியம் அளித்தார் .முதல் ஓவர் முழுக்க ரன் எதுவும் எடுக்காமல் அவர் டக் அவுட் ஆனார். கேப்டன் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து தங்களின் வழக்கமான அதிரடியை தொடங்கினர். சுப்மன் நிதானமாக விளையாடி 37 ரன்களை எடுக்க, விராட் அதிரடியாக 1 சிக்சர் மற்றும் 13 பவுண்டரிகளை பறக்க விட்டு 74 ரன்களை எடுத்தார்.
ஆட்டத்தின் இடையில் மழை குறுக்கிட்ட போது, போட்டி இடையில் அடிக்கடி நிறுத்தப்பட்டு தொடங்கியது. மழையின் காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, இந்தியாவின் இலக்கு 40 ஓவர்களில் 167 ரன்களாக குறைக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதும், 32 ஓவர்களில் 143 ரன்களாக இலக்கு குறைக்கப்பட்டது. கே. எல்.ராகுலும் நமன் தீரும் களத்தில் இருக்க 22.4 ஓவரில் 143 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி அல்லது அர்ஷ்தீப் சிங்கிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , பத்து ஓவரில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து ,2 மெய்டன் ஓவர்களையும் வீசி 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அன்சுல் காம்போஜிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளி கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்த ஒருநாள் போட்டி நவம்பர் 7 ஆம் தேதி வெலிங்டனில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.