

இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி முடித்த பின்னர், தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் பயிற்சியாளர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் தொட்டா கணேஷ் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் ஆட்டத்தின் ஐந்தாவது நாளில் கூடுதலாக ஒரு மணி நேரம் இருந்த நிலையில், இரு அணி வீரர்களும் இணைந்து டிராவில் ஆட்டத்தை முடித்ததை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தோட்டா கணேஷ் அணியின் போக்கினை கடுமையாக சாடியுள்ளார். கிரிக்கெட் வீரர்களின் திறமையை மதிப்பிடுவதைப் போலவே பயிற்சியாளர்களின் திறமையும் மதிப்பிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். ஒரு சில போட்டிகளில் கிடைக்கும் வெற்றியை அடிப்படையாக வைத்து மட்டுமே ஒரு பயிற்சியாளரின் பங்களிப்பை அளவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி (WTC) சுற்றுக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சுழற்சியில் இந்தியா 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள், 3 டிரா , 4 தொழில்களை பெற்றுள்ளது. ஒட்டுமொத்த பங்களிப்பின் அடிப்படையில் இந்தியா 50% புள்ளிகளைப் பெற்று 4 வது இடத்தில் உள்ளது. இதனால், தர வரிசையில் முன்னேறுவதில் அது அதிக அழுத்தத்தை பெற்று வருகிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பின் , இந்திய அணி மொத்தம் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அவற்றில் 9 வெற்றிகள், 10 தோல்விகள் மற்றும் 4 டிராவை அடைந்துள்ளது. கம்பீர் மற்றும் அவரது உதவியாளர்களின் கீழ் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 39.13 ஆக உள்ளது. கம்பீர் தலைமையில் டெஸ்ட் அரங்கில் இந்திய அணி கடுமையான சவால்களை அடைந்துள்ளது. சொந்த மண்ணிலேயே இந்தியா நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளிடம் ஒட்டுமொத்தமாக தோல்வியை சந்தித்துள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணிலும் தொடரையும் இழந்து கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்திய அணியின் தேர்வுக் குழுவும் கடுமையாக ரசிகர்களால் , முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது தனக்கு ஏமாற்றத்தைத் தருவதாகக் கணேஷ் குறிப்பிட்டார்.
இது ஒரு பலவீனமான முடிவு என்றும் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதிக ரன்களை குவித்தும் இந்திய அணியின் இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. நவீன கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டி வடிவத்திற்கும் தனித்துவமான வியூகங்களும் நுணுக்கங்களும் தேவைப்படுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து நாட்கள் முழுவதும் நிலைத்து நின்று ஆடுவதும், எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவதும் மிக முக்கியமான ஒன்றாகும்.
நமது அணியில் ஏராளமான திறமை மிகுந்த பந்துவீச்சாளர்களும் , பேட்ஸ்மேன்களும் இருந்த போதிலும் முக்கிய தருணங்களில் வெற்றி பெறத் தவறுவது கவலை அளிப்பதாக கணேஷ் கவலை தெரிவித்துள்ளார்.