கடைசி நிமிடத்தில் கோல்! பாகிஸ்தானை வீழ்த்தி 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

கடைசி நிமிடத்தில் கோல்! பாகிஸ்தானை வீழ்த்தி 10-வது முறையாக சாம்பியனான இந்தியா!
India - pakistan
India - pakistansource:maalaimalar
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

இந்தியா – பாகிஸ்தான் என்றாலே கிரிக்கெட் மட்டுமல்ல, கால்பந்து போட்டியிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும். அப்படிப்பட்ட பரபரப்பான இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுடன், தொடர்ந்து மூன்று முறை இந்தக் கோப்பையைத் தக்கவைத்த பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் பின்னணியில் இருந்த விறுவிறுப்பான ஆட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

பரபரப்பான இறுதிப்போட்டி :

2026-ம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) சாம்பியன்ஷிப் போட்டிகள் வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்றன. நவம்பர் 17-ம் தேதி தேசிய மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இந்தியா ஏற்கெனவே ஒன்பது முறை இக்கோப்பையை வென்றிருந்தது. பாகிஸ்தானோ முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாகப் போராடின. இருப்பினும், கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் பாகிஸ்தானின் அலம்கிர் காசி கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியது.

ஆட்டத்தை மாற்றிய சிவப்பு அட்டை :

இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் போக்கு மாறியது. 59-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் ஷா, இந்திய வீரர் பிரிசன் பெர்னாண்டஸ் மீது செய்த தவறான தடுப்பாட்டத்துக்காக VAR ஆய்வுக்குப் பிறகு சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் பாகிஸ்தான் பத்து வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த வாய்ப்பை இந்தியா சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. 60-வது நிமிடத்தில் சுஹைல் அகமது பட் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88-வது நிமிடத்தில் சாண்டிப் மண்டி தலையால் முட்டி அடித்த கோல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.

மூன்றாவது முறையாகத் தொடர்ந்து மகுடம்!

2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, பத்தாவது முறையாக SAFF சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றியது. மேலும், தொடர்ந்து மூன்று முறை இந்தப் பட்டத்தை வென்ற முதல் அணியாகவும் சாதனை படைத்தது.

இந்திய கால்பந்தின் வளர்ச்சி பாதை :

இந்த வெற்றி இந்திய கால்பந்துக்கு இன்னொரு உற்சாகமான தருணமாக அமைந்துள்ளது.. கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படும் கவனத்தைப் போலவே கால் பந்துக்கும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.. குறிப்பாக அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டி என்பதால் இரு அணிகளின் வீரர்களுக்கும் அழுத்தம் அதிகமாக இருந்திருக்கும்.. அத்தகைய சூழலில் ஒரு கோல் பின்தங்கி இருந்தாலும் பதற்றமடையாமல் தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கிய இந்திய வீரர்களின் அணுகுமுறை பாராட்டுக்குரியது..

கால்பந்து என்பது தனிநபர் திறமையை மட்டும் நம்பிய விளையாட்டு அல்ல.. சரியான நேரத்தில் சக வீரருக்குப் பந்தை வழங்குவது, எதிரணியின் நகர்வைக் கணிப்பது, தற்காப்பில் ஒருவருக்கொருவர் உதவுவது என ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியம்.. இந்த போட்டியிலும் அணியின் ஒற்றுமையும் விடாமுயற்சியும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தன.. குறிப்பாக ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றிய திறமை வீரர்களின் மன உறுதியை வெளிப்படுத்துகிறது..

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள் இளம் வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல மேடையாக அமைகின்றன.. இத்தகைய போட்டிகளில் கிடைக்கும் அனுபவம், சர்வதேச அளவில் மேலும் வலுவான அணிகளுடன் போதுவதற்கான நம்பிக்கையையும் அளிக்கும்..

பள்ளி கல்லூரி மாணவர்களும் இந்த வெற்றியைப் பார்த்து கால்பந்தைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெற ஊக்கம் அடையலாம்.. வெற்றிக் கோப்பை மட்டும் அல்ல.. அடுத்த தலைமுறைக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதும் இத்தகைய சாதனைகளின் முக்கியப் பயனாகும்.. இந்த நம்பிக்கை தொடர்ந்து பயிற்சி, ஒழுக்கம், திட்டமிடல் ஆகியவற்றால் மேலும் வளர வேண்டும்..

இந்திய கால்பந்தின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை இத்தகைய வெற்றிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.. திறமையான இளம் வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தரமான பயிற்சியும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.. கால்பந்து விளையாட்டுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், உள்ளூர் அளவிலான போட்டிகளையும் ஊக்குவிக்க வேண்டும்.. அப்போது தான் இந்திய அணி ஆசிய அளவிலும் உலக அளவிலும் தனது திறமையை நீரூபிக்க முடியும்..

கடைசி நிமிடம் வரை நம்பிக்கையைக் கைவிடாமல் போராடிய இந்திய வீரர்களின் மன உறுதியும், அணியின் ஒருங்கிணைப்பும் இந்த வெற்றிக்குக் காரணம். தோல்வியின் விளிம்பிலிருந்து வெற்றிக் கோப்பையை உயர்த்திய இந்திய கால்பந்து அணிக்கு வாழ்த்துகள்!

இதையும் படியுங்கள்:
எத்தியோப்பியாவின் வியப்பூட்டும் பாரம்பரியம்: மரக்குச்சிகளில் நடக்கும் பன்னா மக்கள்!
India - pakistan