14 தங்கம், 62 பதக்கங்கள்! பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்களின் அபார சாதனை!

தடகளத்தில் பதக்க மழை; ஷூட்டிங், நீச்சல் மற்றும் டேபிள் டென்னிஸில் முத்திரை பதித்த இந்திய அணி!
Para Asian games
Para asian games NDTV
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் 2026 ஆம் ஆண்டிற்கான பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் இந்தியா தனது ஆதிக்கத்தை சிறிது சிறிதாக வெளிப்படுத்த தொடங்கியிருந்தது. இன்று இந்திய குழுவினர் தங்களது பதக்கவேட்டை தொடங்கியிருந்தனர்.

இன்றைய நாள் அக்டோபர் 21 ஆம் தேதி , கணக்கின் படி இந்தியா பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் ,

தங்கம் - 14

வெள்ளி - 21

வெண்கலம் - 27

பாரா தடகளம் - தங்கம் 5, வெள்ளி 2 ,வெண்கலம் 9

1.பாரா தடகளத்தில் குண்டு எறிதல் பிரிவில் ஆயுஷ் வர்மா தனது இரண்டாவது பதக்கமாக தங்கம் வென்றார்.

2. ஆடவர் உயரம் தாண்டுதல் T64 பிரிவில் 2.05 மீட்டர் தாண்டி பிரவீன் குமார் தங்கப் பதக்கத்தை வென்றார்.

3. ஆடவர் குண்டு எறிதல் F46 பிரிவில், சச்சின் கிலாரி தங்கப் பதக்கத்தை வென்றார்.

4. மகளிர் F34 குண்டு எறிதல் போட்டியில் பாக்கியஸ்ரீ ஜாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

5. ஆடவர் ஈட்டி எறிதல் F12/F13 பிரிவில், மன்ஜீத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

6.. மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் பிரீத்தி பால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

7.ஆடவர் 100 மீட்டர் ஓட்டத்தில் அனுபவ் சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.

8.ஆடவர் 100 மீட்டர் T37 பிரிவில், ராகேஷ்பாய் பட் வெண்கலப் பதக்கம் வென்றார்.

9. ஆடவர் 100 மீட்டர் T47 இறுதிப் போட்டியில் திலீப் காவிட் தங்கம் வென்றார்.

10. மகளிர் 100 மீட்டர் T12 இறுதிப் போட்டியில் சிம்ரன் ஷர்மா தங்கப் பதக்கம் வென்றார்.

11. ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியால் சுக்செயின் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

12. மகளிர் F55 வட்டு எறிதல் இறுதிப் போட்டியில், கரம்ஜோதி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

13. ஆடவர் 100 மீட்டர் T64 இறுதிப் போட்டியில், பிரணவ் தேசாய் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

14. ஆடவர் குண்டு எறிதல் F40 பிரிவில் ரவி ரோங்காலி வெண்கலப் பதக்கம் வென்றார்.

15 ஆடவர் 1500 மீ போட்டியில், சரத் மகானஹள்ளி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

16.ஆடவர் நீளம் தாண்டுதல் T42/T61/T63 இறுதிப் போட்டியில், சைலேஷ் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

17. ஆடவர் ஈட்டி எறிதல் F37 பிரிவில் ஹேனி, வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Para Asian games Medalist
Para Asian games Medalist sportstar

பாரா டேபிள் டென்னிஸ் - 5 வெண்கலம்

1.மகளிர் ஒற்றையர் பிரிவில் பாவினா படேல் ,சோனல்பேன் படேல் , பிராச்சி பாண்டே , சஹானா ரவி ஆகியோரும் ஆடவர் பிரிவில் ஜெகன் மதன் உள்பட அனைவரும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

பாரா ஷூட்டிங் - வெள்ளி1, வெண்கலம் 1

1.ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் மணீஷ் நார்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2. மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் ஸ்ரிஷ்டி அரோரா வெண்கலப் பதக்கம் வென்றார்.

பாரா பவர்லிஃப்டிங் - வெள்ளி 1

1.ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவில், அசோக் 192 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பாரா நீச்சல் - வெண்கலம் 2

1.ஆடவர் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​S11 இறுதிப் போட்டியில்ஹிமான்ஷு நந்தல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

2. ஆடவர் 200மீ தனிநபர் மெட்லி எஸ்7 இறுதிப் போட்டியில் நிரஞ்சன் முகுந்தன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

logo
Kalki Online
kalkionline.com