
இந்திய மகளிர் கிரிக்கட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற 3 வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரின் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
ஜூலை 4, வெள்ளிக்கிழமை அன்று டி20 தொடரின் மூன்றாவது போட்டி லண்டனில் உள்ள பழமையான ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. வழக்கம் போல இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி கேப்டன் பியுமன்ட் டாசை வென்றார். ஆனால் , இம்முறை அவரது முடிவில் மாற்றம் இருந்தது. அந்த மாற்றம் போட்டியின் முடிவையும் மாற்றியது. இங்கிலாந்து அணி இம்முறை பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சோபியா டங்க்லியும் , டேனியல் வயட்டும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .
15 ஓவர்கள் வரை சோபியாவும் டேனியல் வயட்டும் நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை மிகவும் சோதித்தனர். சோபியா 75 ரன்களும் , டேனியல் வயட் 66 ரன்களும் குவித்தனர். இந்த இரண்டு விக்கட்டுக்களும் வீழ்ந்த பின்னர் , இங்கிலாந்து அணியின் அஸ்திவாரம் இழந்து வேகமாக சரிந்து வந்தது. ஒவ்வொரு ஓவரிலும் ஒன்றிரண்டு விக்கெட்டுகள் விழுந்துக் கொண்டிருந்தது.16வது ஓவரில் சிறப்பாக பந்து வீசிய அருந்ததி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 172/9 ரன்களை எட்டியிருந்தது. அருந்ததி ரெட்டியும் தீப்தி ஷர்மாவும் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த போட்டியில் டாமி பியுமண்ட் விக்கெட்டை எடுத்ததன் மூலம் ராதா யாதவ் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பெண் என்ற சாதனையை படைத்தார்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் சார்பில் ஸ்மிருதி மந்தனாவும் , ஷாபாலி வரமாவும் சிறப்பான துவக்கத்தை அளித்தனர்.இந்த கூட்டணி 5 ஓவர்களில் 49 ரன்களை குவித்து இங்கிலாந்து அணியை மிரட்டியது.
அதிரடியாக விளையாடிய ஷாபாலி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மிருதி 56 ரன்கள் எடுத்தார். சரியான விதத்தில் விரட்டலை நோக்கி சென்ற இந்திய அணி , இறுதி ஓவரில் தடுமாறியது.
இறுதி பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பதட்டத்தில் கேப்டன் ஹர்மன் பிரித்கவுர் அவுட்டாக , இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றியை அருகில் சென்று தொலைத்து விட்டது. இதனால் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி சென்ற இந்திய அணிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.