Asian Champions Trophy 2024
Champions Trophy Hockey...

சீனாவை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றியது இந்தியா!

Published on

-வி. ராஜமருதவேல்

சீனாவில் 2024க்கான ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி போட்டி நடைபெற்று வந்தது. லீக் சுற்றில் சீனா, மலேசியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி முழு ஃபார்மில் இருந்தது. அரை இறுதியில் கொரிய அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா. மறுபுறம் சீனா அரை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வென்று இறுதிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் இந்திய - சீன ஹாக்கி அணிகள் மோதின. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த தொடரில் இந்திய ஹாக்கி அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தொடர் வெற்றியை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியின்போது  முதல் 50 நிமிடங்கள் வரை இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் பரபரப்பாக போட்டி சென்றது. இந்தியாவின் ஜூக்ராஜ் ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரித் உதவியுடன் முதல் கோல் அடித்தார். போட்டியின் முடிவில் இந்திய அணி ஒரு கோல் மட்டும் அடித்திருந்தது. சீன அணியை கோல் அடிக்க விடாமல் இந்திய அணி சிறப்பாக தடுத்து விளையாடியது. இதனால் சீன அணியால் கோல் அடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது. 

இதையும் படியுங்கள்:
இந்திய அணியில் தயவுசெய்து என்னைத் தேர்வு செய்யாதீர்கள் – முகமது ஷமியின் வேண்டுகோள்!
Asian Champions Trophy 2024

இறுதியில் சீன அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை தக்க வைத்துக் கொண்டது இந்திய அணி. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 5 வது முறையாக வென்று சாதனை படைத்தது இந்திய  ஹாக்கி அணி. 2011, 2016, 2018 மற்றும் 2021ல் இந்தியா ஆசிய சாம்பியன் டிராபியை வென்றது. 2018ல் இந்தியாவும் பாகிஸ்தானும் பட்டத்தை பகிர்ந்து கொண்டன.

இறுதிப் போட்டியில் வென்று முதல் இடம் பிடித்த இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த சீனாவுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. மூன்றாவது இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com