இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருக்கிறார்கள். அது ஏன் என்று பார்ப்போமா?
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது. இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நின்றது. பின் அடுத்தடுத்த நாட்கள் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. மூன்றாவது போட்டி ட்ராவில் முடிந்தது. அந்தவகையில் தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இன்று களத்திற்கு வந்த இந்திய வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தார்கள். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. அதாவது இந்த கருப்பு நிற பட்டை பொதுவாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அல்லது முக்கிய தலைவர்கள் யாரேனும் மறைந்தால் அவர்களது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அன்று நடைபெறும் போட்டியில் அவர்களது ஜெர்சியில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து விளையாடுவார்கள்.
இதுபோல இன்று இந்திய வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்ததற்கு காரணம் இருக்கிறது. அதாவது இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று உடல் நலக்குறைவினால் காலமானதை தொடர்ந்து அவரது நினைவை பிரதிபலிக்கும் வகையில் இந்திய வீரர்கள் அவர்களது கைகளில் கருப்பு நிற பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
மன்மோகன் சிங் மறைவிற்கு பிசிசிஐ தனது சமூக வலைதளத்தில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவை ஒட்டி நமது இந்திய வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர்." என்று விளக்கமளித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 424 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் இந்திய அணி சற்று முன்பு வரை இரண்டு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் அடித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.