“இந்திய அணி உலகக்கோப்பை வெல்லாது” – அடித்துச் சொல்லும் இங்கிலாந்து முன்னாள் வீரர்!

David Lloyd
David Lloyd

ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் வெல்லாது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் கூறியது, இந்திய ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் ஜூன் மாதம் 4ம் தேதி டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் மோதவுள்ளன. 20 அணிகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து மோதவுள்ளன. அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளிலும், இறுதி போட்டி 29ம் தேதியிலும் நடைபெறவுள்ளன.

டி20 இந்திய அணியில், கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சப்ஸ்ட்டிட்யூட் வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர்க்கொண்ட உலகக்கோப்பை தொடரில், தொடக்கம் முதல் ஒரு போட்டிக்கூட தோல்வியடையாமல் விளையாடிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. இதனால், ரசிகர்கள் எழுப்பிய எதிர்பார்ப்பு என்ற வானளவு கோட்டை ஒரே நிமிடத்தில் சரிந்து விழுந்தது. இதனால், இந்திய வீரர்களும் ரசிகர்களும் பெரும் மன உளைச்சலடைந்தனர். குறிப்பாக ரோஹித் ஷர்மா, அந்தத் தோல்வியிலிருந்து வெளியே வர முடியாமல் திணறினார்.

அப்போது ரசிகர்களின் பேராதரவான வரி, “டி20 உலகக்கோப்பையில் பார்த்துக்கொள்ளலாம்.” என்பதுதான். ஆகையால், ஒட்டுமொத்த இந்தியாவும் அந்தத் தோல்வியை, வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் சரி செய்ய வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்தளவுக்கு இந்திய வீரர்களும் முழு மூச்சுடன் இறங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
“சும்மா கத்துவதால் கோப்பையை வெல்ல முடியாது” – விராட் கோலி குறித்து பேசிய ராயுடு!
David Lloyd

இப்படி இந்தியாவின் முழு நம்பிக்கைக்கும் கேள்வி எழுப்பும் விதமாகத்தான் தற்போது டேவிட் பேசியிருக்கிறார். அதாவது, “இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் ரிஸ்க் எடுத்து பேட்டிங் மற்றும் பவுலிங் விளையாட விரும்புவதில்லை. இந்தியா ஒரு கணிக்கக் கூடிய அணித்தான். அவர்களுடைய தரத்தை எதிரணியினர் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். மேலும் இந்திய அணியினர் எதிரணிக்கு அச்சுறுத்தலைக் கொடுப்பவர்கள் கிடையாது. இந்திய அணி உலக்கோப்பையில் வெல்ல வாய்ப்பில்லை” என்று இந்திய வீரர்களை மட்டம்தட்டும் விதமாக அவர் பேசியது, இந்திய ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com