“சும்மா கத்துவதால் கோப்பையை வெல்ல முடியாது” – விராட் கோலி குறித்து பேசிய ராயுடு!

Agressive Virat Kohli
Virat Kohli
Published on

ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இதனையடுத்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, “சும்மா கத்துவதால் மட்டும் கோப்பையை வெல்ல முடியாது.” என்று விராட் கோலி குறித்துப் பேசியிருக்கிறார்.

பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி, சென்னை அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அப்போது சென்னை அணியின் ரசிகர்களையும் வீரர்களையும் பெங்களூரு ரசிகர்கள் கேலி செய்தனர். அது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம், விராட் கோலி சென்னை அணி ரசிகர்கள் கத்தும்போது வாயை மூடுங்கள் என்பது போல சைகை காண்பித்தார் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக விராட் மட்டுமல்ல, மைதானத்தில் களமிறங்கி வெறியுடன் விளையாடும் வீரர்கள் விக்கெட் எடுத்தால் அக்ரஸ்ஸிவாக கத்துவது வழக்கம்.  விராட் கோலி இளம் வீரராக இருந்தபோதே, ஒரு அக்ரஸ்ஸிவ் ப்ளேயராகவே இருந்து வந்தார். இப்போது அதனை குறைத்துக் கொண்டாலும், அவ்வப்போது தன்னைமீறி விளையாட்டில் கவனம் செல்கையில், அவ்வாறு அக்ரஸ்ஸிவாக செயல்படுகிறார்.

ஆனால், அன்றைய ஆட்டத்தில் ஏராளமான குற்றங்கள் பெங்களூரு அணியின் வீரர்கள் மீதும், ரசிகர்கள் மீதும் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு, “மைதானத்தில் சும்மா கத்துவதன் மூலமும் கொண்டாடுவதன் மூலமும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது. ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் முதலில் நீங்கள் பிளே ஆஃப் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். முக்கியமான போட்டிகளை வெற்றி பெறும் பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.” என்று அவர் பேசியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
"தக்க பதிலடி கொடுக்காமல் எனக்கு ஓய்வில்லை" – தோனி!
Agressive Virat Kohli

இந்த பதிலை சென்னை அணி ரசிகர்கள் வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாகவே ஆர்சிபி கொண்டாட்டத்தை கிண்டல் செய்த ராயுடு, சென்னை அணி வேண்டுமானால் ஒரு கோப்பையை வாங்கிக் கொண்டு மைதானத்தை சுற்றி வாருங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி சென்னை அணி ரசிகர்களும் பெங்களூரு அணி ரசிகர்களும் மோதிக் கொள்ளும் சமயத்தில், சில ரசிகர்கள் உலகக்கோப்பை போட்டியை எதிர்பார்த்து சைலண்ட்டாக இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com