டி20 கிரிக்கெட்டில் உலக சாதனைப்படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்: என்ன சாதனை தெரியுமா?

Harmanpreet Kaur
Harmanpreet Kaur

டி20 தொடர் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் தொடாத சிகரத்தை இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தொட்டி உலக சாதனைப்படைத்திருக்கிறார்.

மகளிருக்கான டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி வான்காடே மைதானத்தில் டிசம்பர் 6 ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.

இது சர்வதேச டி20 தொடர்களில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் நடைபெற்ற 101 வது போட்டியாகும். இந்த தொடர் முழுவதும் அவர்தான் கேப்டனாக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ஹர்மன்ப்ரீத் சர்வதேச டி20 தொடர்களில் அதிக போட்டிகளில் கேப்டன்ஸி செய்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஹர்மன்ப்ரீத்திற்கு அடுத்த இடத்தில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் இருக்கிறார். இவர் 100 சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து மகளிர் அணி முன்னாள் கேப்டன் சார்லட் எட்வார்ட்ஸ். இவர் 93 போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார்.

ஹர்மன்ப்ரீத், மகளிர் அணி கேப்டன்களை மட்டும் பின்தள்ளி முன்னேறவில்லை. ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் ஒரு சவாலாகத்தான் இருக்கிறார். ஏனெனில் இதுவரை ஆடவர் கிரிக்கெட்டில் கூட இவ்வளவு அதிக போட்டிகளில் யாரும் கேப்டன்ஸி செய்யவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.

இதையும் படியுங்கள்:
கெளதம் கம்பீர் ரன் அவுட், பழிதீர்த்து கொண்டாடிய ஸ்ரீசாந்த்!
Harmanpreet Kaur

ஆடவர் கிரிக்கெட்டில் அதிக சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டர் ஆரோன் பின்ச். இவர் மொத்தம் 76 போட்டிகளில் கேப்டன்ஸி செய்துள்ளார். அடுத்த இடத்தில் முன்னாள் இந்தியன் கேப்டன் தோனி 72 சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டன்ஸி செய்துள்ளார்.

ஹர்மன்ப்ரீத் ஒரு கேப்டனாக அதிக டி20 போட்டிகளில் விளையாடினாலும் அணியின் வெற்றி அவ்வளவாக இல்லை என்றே கூற வேண்டும். 101 போட்டிகளில் கேப்டன்ஸி செய்த இவர் 57 போட்டிகளில் மட்டுமே வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார். மற்ற 39 போட்டிகளில் தோல்வியையே சந்தித்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்து முதல் இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா கிரிக்கெட்டர் மெக் லானிங். இவர் 100 போட்டிகளில் 76 வெற்றிகளைப் பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் இங்கிலாந்து வீரர் சார்லட். இவர் 68 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். மூன்றாவது இடத்தில் தான் இந்திய கிரிக்கெட்டர் ஹர்மன்ப்ரீத் இருக்கிறார்.

Harmanpreet Kaur i
Harmanpreet Kaur i

இனிவரும் போட்டிகளில் வெற்றிப்பெற்று வெற்றிக்கணக்கைக் கூட்டும் வாய்ப்பு ஹர்மன்ப்ரீதிற்கு உள்ளது. அந்த வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பாதை பொருத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com