#BIG NEWS : ஹங்கேரியில் ஒலித்த இந்தியாவின் வெற்றி முழக்கம்! சுஜீத் கல்கல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை..!

sujeet kalkal
sujeet kalkal
Published on

ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற பாலியாக் இம்ரே & வர்கா ஜானோஸ் நினைவு போட்டியில் 65 கிலோ ஆண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் சுஜீத் கல்கல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

சுஜீத் பல அனுபவமிக்க மற்றும் தலைசிறந்த வீரர்களை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். முதல் சுற்றில், பாரிஸ் 2024 ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற அல்பேனியாவின் இஸ்லாம் துடாயெவை (Islam Dudaev) 11-0 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார். இது அவரது அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தியது.

காலிறுதிப் போட்டியில், ஐரோப்பிய வெள்ளிப் பதக்கம் வென்ற பிரான்சின் கம்சாட் அர்சாமர்சோயெவை (Khamzat Arsamerzouev) எதிர்கொண்ட சுஜீத், தனது துல்லியமான ஆட்டத்தால் அவரையும் எளிதாக வீழ்த்தினார். அரையிறுதியில், ஆர்மீனியாவின் வாஸ்கன் டெவண்யானை (Vazgen Tevanyan) 6-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்தார்.

இறுதிப் போட்டியில், ஐரோப்பிய வெண்கலப் பதக்கம் வென்ற அஜர்பைஜானின் அலி ரஹிம்சாடேவை (Ali Rahimzade) எதிர்கொண்டார் சுஜீத். இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் ஒரு சில புள்ளிகளை இழந்தாலும், சுஜீத் கல்கல் தனது நிதானத்தையும், நுட்பமான தாக்குதல் உத்திகளையும் கையாண்டார். இரண்டாவது சுற்றில், தனது வேகத்தையும், அசாத்தியமான உடல் வலிமையையும் பயன்படுத்தி இரண்டு முக்கிய டேக் டவுன்களை (takedowns) செய்து முன்னிலை பெற்றார். இறுதியில், ரஹிம்சாடேவை 5-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை வியாதிக்கும் லட்டு சாப்பிடலாமா? இந்த லட்டு உங்க வாழ்க்கையையே மாத்தும்!
sujeet kalkal

சுஜீத் கல்கலின் இந்த வெற்றி, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் வென்ற ஆசிய அண்டர்-23 சாம்பியன்ஷிப் பட்டத்திற்குப் பிறகு, அவரது இரண்டாவது முக்கிய தங்கப் பதக்கமாகும். இந்த வெற்றி வரவிருக்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு (செப்டம்பரில் குரோஷியாவின் சாகிரெப் நகரில் நடைபெற உள்ளது) இந்திய வீரர்களுக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கும். இந்த ரேங்கிங் சீரிஸ் போட்டியில் பெற்ற புள்ளிகள், உலக சாம்பியன்ஷிப்பில் வீரர்களுக்கு சிறந்த வரிசைப்படுத்துதலை (seeding) பெற உதவும்.

இந்திய மல்யுத்த சம்மேளனம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் சுஜீத் கல்கலின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இளம் வயதிலேயே உலக அரங்கில் தனது முத்திரையைப் பதித்துள்ள சுஜீத் கல்கல், இந்திய மல்யுத்தத்தின் எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கைத் துணையாகத் திகழ்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com