
நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் வீரர், இந்தியாவின் ‘தங்க மகன்’ என்று அழைக்கப்படுகிறார். அவர் 2020 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று, ஆசியாவில் முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். 2023-ல், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் ஆசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
தென் ஆப்பிரிக்காவின் பாட்செப்ஸ்ட்ரூம் நகரில் 2025-ம் ஆண்டுக்கான தடகள போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு தகுதி பெறுவதற்கான போட்டி இந்த ஸ்டேடியத்திலேயே நடந்தது. இதில், அவர் தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.
6 பேர் களம் கண்ட இந்த பந்தயத்தில் நீரஜ் சோப்ரா, உள்ளூர்காரர்களான டோவ் சுமித் மற்றும் டன்கன் ராபர்ட்சன் ஆகிய இருவரையும் பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றார். அதாவது நீரஜ் சோப்ரா, 84.52 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி, இந்த சீசனை வெற்றியோடு தொடங்கினார். தென்ஆப்பிரிக்காவின் டோவ் சுமித் 82.44 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடமும், டன்கன் ராபர்ட்சன் 71.22 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடமும் பிடித்தனர்.
27 வயதான நீரஜ் சோப்ரா, 3 முறை ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாதனையாளருமான புதிய பயிற்சியாளர் ஜன் ஜெலன்ஸ்கியுடன் (செக்குடியரசு) இணைந்த பிறகு கலந்து கொண்ட முதல் போட்டி இதுவாகும். நீரஜ் சோப்ரா 2022-ம் ஆண்டில் தனது சிறந்த செயல்பாடாக 89.94 மீட்டர் வீசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈட்டி எறிதலில் சர்வதேச வீரர்களில் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் நீரஜ் சேப்ரா. முதலிடத்தில் அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் (87.76 மீ.,) உள்ளார். அடுத்த மாதம் அதாவது மே 16-ம்தேதி நடக்கவுள்ள தோகா டயமண்ட் லீக் போட்டியிலும், மே 24-ம்தேதி ஹரியானாவில் உள்ள பஞ்சகுலாவில் நடக்கும் என்.சி. கிளாசிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தயாராகி வருகிறார் நீரஜ் சேப்ரா.