

டி-20 சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டனான ஹர்திக் பாண்டியா, இந்த ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்கான ஏலத்துக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் அவர் மீண்டும் மும்பை இண்டியன் அணிக்கு திரும்பலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இதுபற்றி மும்பை இண்டியன்ஸ் அணி இன்னும் வாய்திறக்கவில்லை. ஐபிஎல் போட்டிகளுக்கான பேரம் நவம்பர் 26 இல் முடிகிறது. எனவே அதன் பிறகு முழு விவரங்கள் தெரியவரும்.
2022 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா 7 சீசன்களில் மும்பை இண்டியன் அணிக்காக விளையாடினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தாவிய பிறகு அந்த அணிக்கு தலைமையேற்று இறுதிப்போட்டிக்கு அணியை அழைத்துச் சென்று கோப்பையையும் கைப்பற்றினார்.
ஹர்திக் பாண்டியா மும்பை இண்டியன் அணிக்கு திரும்பப் போவது எனக்கு உறுதியாக தெரியும். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். அவர் அணி மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படாத நிலையில் என்னால் அதை உறுதிப்படுத்த முடியாது என்று குஜராத் டைட்டன்ஸுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஐபிஎல் சீசன் போதும் ஒரு அணியிலிருந்து ஒருவரை மற்றொரு அணிக்கும் இழுக்கும் பேரம் நடக்கத்தான் செய்கிறது. ஹர்திக் பாண்டியா மும்பை இண்டியன்ஸ் அணிக்குத் தாவினால், அதற்கு பதிலாக டைட்டன்ஸ் அணிக்கு வரப்போவது யார் என்பது தெரியவில்லை. கடந்த இரண்டு சீசன்களில் காயமடைந்த ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட ஜோப்ரா ஆர்சரை மும்பை இண்டியன்ஸ் விடுவிக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
ஒருவேளை ஹர்திக் பாண்டியா ஏலத்துக்கு எடுக்கப்பட்டு மீண்டும் மும்பை இண்டியன் அணிக்கு திரும்பினால், ஐந்து முறை குஜராத் டைட்டன் அணிக்கு தலைமை வகித்த அவர், மும்பை இண்டியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் கீழ் விளையாட தயாராக இருக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.
ஐபிஎல் போட்டியில் எந்தெந்த அணியில் யார் யார் விளையாடுகளிறார்கள். என்ன தொகைகு ஏலம் போனார்கள் என்கிற பட்டியலை பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ பட்டியலை வெளியிட்டால்தான் இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.