IPL 2024: லக்னோ அணியின் துணைக் கேப்டனை மாற்றிய கே.எல். ராகுல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

K.L.Rahul and pooran
K.L.Rahul and pooran
Published on

ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதித் தொடங்கவுள்ள நிலையில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் துணைக் கேப்டனான க்ருணால் பாண்டியாவை நீக்கிவிட்டு நிக்கோலஸ் பூரானைத் தேர்ந்தெடுத்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் அணிகளுக்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். வணிக ரீதியகாவும், நிர்வாக ரீதியாகவும், அணிகளுக்குள்ளும் பல்வேறு மாற்றங்களை உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். அந்தவகையில் இப்போது லக்னோ அணியின் இந்தத் திடீர் வெளிப்படையான மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கே.எல்.ராகுல் தலைமை தாங்கும் லக்னோ அணியின் உரிமையாளர் கொயங்கா, அணியைப் பிரபலப்படுத்த நட்சத்திர வீரர்களை ஓப்பந்தம் செய்வதில் ஆர்வமாக இருந்து வருகிறார். இதன் காரணமாகத்தான் லக்னோ அணியில் ஜஸ்டின் ஷங்கர், ஷமார் ஜோசப், லான்ஸ் க்ளூசினர் ஆகியோரை அணியில் தேர்ந்தெடுத்தனர்.

பொதுவாக ஐபிஎல் அணிகளில் இந்திய வீரர்களையே தேர்ந்தெடுப்பர். ஏனெனில், அப்போதுதான் வணிக ரீதியான ஒப்பந்தம் எளிதாக இருக்கும். அதனால்தான் லக்னோ அணி உருவாகும்போதே கே.எல்.ராகுலை அணிக் கேப்டனாகக் கொண்டு வந்தனர். அதேபோல் அவருக்குப் பக்கபலமாக இருக்க துணைக் கேப்டனாக க்ருணால் பாண்டியாவை நியமனம் செய்தனர்.

கடந்த ஆண்டு நடந்தப் போட்டியின் பாதியிலேயே கேல்.எல்.ராகுல் காயம் காரணமாக வெளியேறினார். அப்போது மீதிப் போட்டிகளுக்கு க்ருணால் பாண்டியாவே கேப்டனாக செயல்பட்டார். ஆனால் தற்போது லக்னோ அணி நிர்வாகம் க்ருணால் பாண்டியாவை துணைக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி அதற்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரானைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
Ranji Trophy: 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி.. 36 வருடக் கனவு நிறைவேறுமா?
K.L.Rahul and pooran

நிக்கோலஸ் பூரான் எம்எல்சி, சிபிஎல், எமிரேட்ஸ் லீக் போன்ற பல்வேறுத் தொடர்களில் சாம்பியன் பட்டத்தை அணிக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறார். அதேபோல் சில சமயம் வெஸ்ட் இண்டீஸின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆகையால்தான் லக்னோ அணி நிர்வாகம் இந்த நட்சத்திர வீரரைத் துணைக் கேப்டனாக அறிவித்துள்ளது. எப்படி மும்பை அணி ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி ஹார்திக் பாண்டியாவைத் தேர்ந்தெடுத்ததோ, அதேபோல் தான் லக்னோ அணியும் செய்துள்ளது. எப்படியானாலும் சரி, பாண்டியா சகோதரர்களுக்குத் தொடர்ந்து இன்னல்கள் மட்டும் வந்துக்கோண்டே இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com