IPL 2024: “இதுதான் என்னுடைய கடைசி” – ரோஹித் ஷர்மா பேசிய வீடியோ!

Mumbai Player Rohit Sharma
Rohit Sharma
Published on

மும்பை அணி முதல் அணியாக 2024 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், தற்போது ரோஹித் ஷர்மா அதுபற்றி பேசும் வீடியோவை கேகேஆர் அணி இணையத்தில் வெளியிட்டது. மேலும், சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலிட் செய்தும் உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் லக்னோ அணிக்கும் ஹைத்ராபாத் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஹைத்ராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. ஹைத்ராபாத் அணியின் இந்த வெற்றி, மும்பை அணிக்கு பாதகமாக அமைந்தது. ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற மும்பை அணி முதல் அணியாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், ரசிகர்கள் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஐபிஎல் ஆரம்பிக்கும் முன்னரே, மும்பை அணியின் கேப்டன்ஸி மாற்றப்பட்டது. ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஸி ஹார்திக் பாண்டியாவிற்குக் கொடுக்கப்பட்டது. இதனால், ஹார்திக் பாண்டியாவிற்கும் பல எதிர்ப்புகள் எழுந்தன. சில ரோஹித் ரசிகர்கள் மும்பை அணியையே கைவிட்டனர். மேலும் ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில், மைதானத்தில் ஹார்திக் செயல்கள் வீடியோவாக அதிகளவில் பகிரப்பட்டு ரசிகர்களிடையே ரோஹித்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறிய பின்னர் ரோஹித் ஷர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோ ஒன்றை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டது. ஆனால், அந்த வீடியோவில் சரியாக எதுவும் கேட்கவில்லை. இதனால் ரசிகர்கள், Noice Cancellation பயன்படுத்தி இரைச்சலை நீக்கினர்.

இதையும் படியுங்கள்:
CSK Vs GT: தோனியை சிக்ஸே அடிக்க விடமாட்டோம் – GT யின் மாஸ்டர் ப்ளான்!
Mumbai Player Rohit Sharma

பின் ரோஹித் ஷர்மா பேசுவதை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி பேசி இருப்பதுத் தெரியவந்தது. அப்போது அவர், "இங்கு ஒவ்வொரு விஷயமும் மாறிக்கொண்டே இருக்கிறது. நான் இந்த அணியை கட்டமைத்தேன். இதுதான் எனது வீடு. கோவிலை போல அந்த அணியை மாற்றினேன்." என்று கூறியிருக்கிறார். அதன்பின், "இதுதான் எனது கடைசி" என்று கூறினார். அந்த கடைசி வாக்கியம் தெளிவாக கேட்கவில்லை.

இதன்மூலம் மும்பை அணி நிர்வாகத்தின் மீது ரோஹித் கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்றும், இதுதான் அவருடைய கடைசி போட்டியாக இருக்கும் என்றும் தெரியவருகிறது. இந்த வீடியோ பெரும் சர்ச்சை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியதால், உடனே கேகேஆர் அந்த வீடியோவை இணையத்திலிருந்து நீக்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com