IPL 2025: 10 போட்டிகள் குறைப்பு… இதுதான் காரணமா?

IPL Players
IPL Players
Published on

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 84 போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், 74 போட்டிகள் மட்டுமே நடைபெறவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

2023ம் ஆண்டிலிருந்து 2027ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை வழங்கும்போது அந்த இடைப்பட்ட ஒவ்வொரு ஆண்டுகளிலும் எத்தனை போட்டிகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடப்படும். அந்தவகையில், 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தலா 74 போட்டிகளும், 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தலா 84 போட்டிகளும், 2027 ஆம் ஆண்டில் 94 போட்டிகளும் நடத்த உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது பிசிசிஐ.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளதாம். அதாவது, 84 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகளை மட்டுமே நடத்தப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இதனால், ஒளிபரப்பு செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இணையம் மற்றும் மொபைலில் ஒளிபரப்பி வரும் ஜியோ சினிமா நிறுவனத்திற்கும் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு கூடுதல் போட்டிக்கும் பல கோடிகளை ஈட்டலாம் என கணக்கிட்டு இருந்த இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் பிசிசிஐ எடுத்து இருக்கும் முடிவு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.

திட்டமிட்டப்படி ஏன் பிசிசிஐ போட்டிகளை நடத்தவில்லை என்று பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளன. அதாவது, ஒரு ஆண்டில் இந்திய வீரர்கள் மொத்தம் 11 மாதங்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஓய்வே கிடைப்பதில்லை.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்தப் பதிவு… கொந்தளித்த ரிஷப் பண்ட்!
IPL Players

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை அனைத்து போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால் இந்திய அணி வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஓய்வு கிடைக்காது. இதனால், சுமார் 2 மாதக் காலம் ஓய்வே இல்லாமல் பயணம் செய்து போட்டியில் விளையாடும் சூழல் ஏற்படுகிறது.

இப்போது திட்டமிட்டப்படி 84 போட்டிகளும் இருந்தால், இந்திய வீரர்கள் மேலும் 2 போட்டிகளில் விளையாடும் சூழல் ஏற்படும். அப்படி விளையாடினால், ஐபிஎல் முடிந்தவுடனே, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட வேண்டிய சூழல் வரும்.

இவற்றைக் கருத்தில்கொண்டுதான் பிசிசிஐ போட்டிகளை குறைத்துள்ளது.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com