ஐபிஎல் 2026: ஏற்பாடுகளை ஆரம்பித்த ஐபிஎல் நிர்வாகம்… KKR கேப்டன் கே.எல்.ராகுல்?

K.L.Rahul
K.L.Rahul
Published on

ஐபிஎல் 2026 சீசனுக்கான ஆயத்தப் பணிகளில் அணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வீரர்களின் trade window திறக்கப்பட்ட நிலையில், பல நட்சத்திர வீரர்களின் பெயர்கள் வலம் வரத் தொடங்கியுள்ளன. இதில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது, இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுல். இவரைத் தங்கள் அணிக்குள் கொண்டு வர, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

ஐபிஎல் 2025 சீசனில் கொல்கத்தா அணி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படவில்லை. குறிப்பாக, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன்சி பொறுப்பு ஆகியவற்றில் சில பின்னடைவுகளைச் சந்தித்தது. இந்த நிலையில், கே.எல்.ராகுலை தங்கள் அணிக்குள் கொண்டு வருவது, பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும் என்று KKR நம்புகிறது. ராகுல் ஒரு சிறந்த தொடக்க வீரர், விக்கெட் கீப்பிங் திறமை கொண்டவர், மற்றும் அணியை வழிநடத்தும் அனுபவம் பெற்றவர். அவர் அணிக்கு வந்தால், ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடத்தையும் காலியாக்க முடியும். மேலும் அணியின் கேப்டனாக ஆக்கலாம் என்று நிர்வாகம் கலந்தாலோசித்து வருகிறது.

கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய கே.எல்.ராகுல், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் டெல்லி அணியின் முக்கியமான தூணாக கருதப்பட்டார். அவரை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க டெல்லி நிர்வாகம் விரும்பவில்லை. ராகுலை வைத்துக்கொண்டு, அணியின் எதிர்கால திட்டங்களை வகுக்க டெல்லி நிர்வாகம் முனைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எல்.ராகுலை KKR-க்கு மாற்றுவதில் சில சவால்கள் உள்ளன. ராகுலுக்கு ஈடாக டெல்லி அணிக்கு எந்த வீரரை வழங்குவது என்பதில் KKR நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. டெல்லி அணிக்குத் தேவைப்படும் வீரர் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. அதே நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும் ராகுலை ஒரு மாற்றுத் தலைவராகக் கருதி, இவரை அணிக்குள் கொண்டு வர முயற்சி செய்வதாக வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த திட்டங்கள் ஐபிஎல் 2026-க்கான அணிகளின் பலத்தை தீர்மானிக்கும் முக்கிய களமாக மாறி உள்ளது. கே.எல்.ராகுல் எந்த அணிக்குச் செல்வார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.

இதையும் படியுங்கள்:
டைல்ஸ் பராமரிப்பு: இதைச் செய்தால் உங்கள் வீட்டுத் தரை எப்போதும் பளபளப்பாக இருக்கும்!
K.L.Rahul

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வாங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாகவும் அவர் அணியின் பலத்தை அதிகரிப்பார். இந்த பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டிட், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
டோடோ பறவைகள்: அன்று அழித்ததும் அவனே; இன்று மீண்டும் படைப்பதும் அவனே!
K.L.Rahul

கடந்த சீசனில் அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்ற நிலையில், இந்தப் பதவி விலகல் நடந்துள்ளது. புதிய பயிற்சியாளரைத் தேடும் பணியில் கேகேஆர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அடுத்த சீசனுக்கான அணியை வலுப்படுத்த, புதிய பயிற்சியாளரை விரைவில் நியமிக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் கருதுகிறது.

அதேபோல் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை டிரேடிங் முறையில் வாங்க கொல்கத்தா தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com