#BREAKING ஐபிஎல் 2026: தொடர்ந்து 3-வது தோல்வி - சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி...!!

11-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி படுதோல்வியை தழுவியது.
RCB vs CSK
RCB vs CSKimage credit-pingtvindia.com
Updated on

இன்றைய கிரிக்கெட் திருவிழாவில் இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.

முதல் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

2-வது வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் பெங்களூரு அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய சென்னை அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற சிஎஸ்கே, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே, பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஆடிய 3 ஆட்டங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது...

logo
Kalki Online
kalkionline.com