IPL: ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ... ஆனால் இந்த இரண்டு வீரர்கள்?

Rishab pant
Rishab pant
Published on

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் பிசிசிஐ தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றது.  அந்தவகையில் ஒரு ஆண்டுகள் ஓய்விலிருந்த ரிஷப் பண்ட்டிற்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பிசிசிஐ அளித்துள்ளது.

ரிஷப் பண்ட் கடந்த 14 மாதங்களாகக் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்தார். இதனால் எந்த ஒரு உள்ளூர் போட்டிகளிலும் சர்வதேச போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இதனையடுத்து  சில நாட்களாக அவர் காயத்திலிருந்து மீண்டு உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தார். ஆனால் பிசிசிஐக்கு அவர் உடற்தகுதிப் பெற்ற சான்றிதழைக் கொடுத்தால் மட்டுமே ஐபிஎல் போட்டியில் விளையாட முடியும் என்ற நிலை இருந்தது. இந்தநிலையில் ரிஷப் அந்த சான்றிதழைக் கொடுத்ததால் பிசிசிஐ அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. இதனால் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை அடுத்து டி20 உலககோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக இந்திய அணியின் டி20 தொடர்களில் நிரந்தர விக்கெட் கீப்பர் பதவியில் இருந்து வந்தார் ரிஷப். ஆனால் ஓய்வில் இருந்த அந்த இடைவெளியில் அவரின் இடம் பறிப்போனது. இதனையடுத்து மீண்டும் அதனைப் பிடிப்பதற்காகத்தான் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ யிடம் வாய்ப்புக் கேட்டார்.

இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறனைப் பார்த்துவிட்டுத்தான் இந்திய அணியின் தேர்வு குழு ஆணையம் அவர் டி20 தொடரில் விளையாடுவாரா என்பதை அறிவிக்கும். ஒருவேளை ரிஷப் பேட்டிங் நன்றாக செய்துவிட்டு விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினாலோ அல்லது விக்கெட் கீப்பிங் நன்றாக செய்துவிட்டு பேட்டிங்கில் சொதப்பினாலோ டி20 போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பே இல்லை என்பதுத் தெரியவந்துள்ளது. அதன்பின்னர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி நிரூபித்தால் மட்டுமே  இந்திய அணியில் விளையாட முடியும்.

இதையும் படியுங்கள்:
IPL-ல் சாதனை படைத்தார் தோனி!
Rishab pant

பிசிசிஐ இந்த அறிக்கையில் ஷமி குறித்தும் குறிப்பிட்டு இருக்கிறது. முகமது ஷமியின் வலது கால் பாதத்தில் அறுவை சிகிச்சை செய்ததாகவும் அவரை பிசிசிஐ யின் மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளது. அதேபோல் பிரஷித் கிருஷ்ணாவும் தொடையில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் உள்ளதால், அவரும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com