40 கோடி வச்சா பேசலாம்! இல்லாட்டி இடத்தை காலி செய்கிறோம் - போர்க்கொடி தூக்கும் ஐபிஎல் வீரர்கள்!

சம்பள உயர்வை உயர்த்தக் கோரி முன்னணி வீரர்கள் போர்க்கொடி தூக்கியதால் ஐபிஎல் அணி
IPL Auction
IPL AuctionMoneycontrol
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஐபிஎல் அணிகளை சேர்ந்த ஒரு சில வீரர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் பத்தாது என்று பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர். அடுத்த மாதம் மினி ஏலம் நடைபெற உள்ள நிலையில் இந்தப் பிரச்சனைகள் தலை தூக்கி உள்ளன. ஐபிஎல் - இன் அடுத்த சுற்று விரைவில் தொடங்க உள்ள நிலையில் வீரர்களின் அதிக ஏலத் தொகை கோரிக்கை பல அணி நிர்வாகத்தினருக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுக்க உள்ளது. ஒரு சில முன்னணி வீரர்கள் தங்களது அணியில் நீடிப்பதற்கு தங்களுக்கு கொடுக்கப்படும் தொகையினை உயர்த்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

குறிப்பிட்ட சில முன்னணி வீரர்கள் தங்கள் விளையாடும் அணியில் தொடர்வதற்கு ₹40 கோடி ரூபாய் வரை கட்டணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கேட்கும் தொகையினை கொடுத்தால் மட்டுமே அணியில் தங்களால் நீடிக்க முடியும் என்றும் , இல்லாவிட்டால் தாங்கள் வேறு அணிக்கு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனால் அவர்கள் ஏலத்தில் பங்கேற்று பெரிய ஊதியத்தை பெற முடியும் என்று நம்புகின்றனர். இந்த நடைமுறையை பல வீரர்களும் பின்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீரர்களின் இது போன்ற முடிவுகளுக்கு ஒரு சில முன்னுதாரணங்களை கூறுகிறார்கள். ஏற்கனவே ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷப் பந்த் ஆகியோர் அப்போதைய அணிகளில் இருந்து விடுபட்டனர். அதன் பின்னர் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்ற அவர்கள் ₹26 மற்றும் ₹27 கோடிகள் கட்டணத்தில் மற்ற அணிகளில் ஒப்பந்தமாகினர். இந்த நிகழ்வுகள் கேப்டன் பதவியுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது.

வீரர்களின் கட்டண உயர்வு கோரிக்கைகள் அவர்கள் தரப்பில் இருந்து நியாயப்படுத்தப்படுகிறது. அணியின் உரிமையாளர்கள் ஏராளமாக கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பொழுது , அவர்களின் வருமானத்திற்கு காரணமான வீரர்கள் குறைந்தபட்ச பங்காவது தங்களுக்கு வேண்டும் என்று நினைக்கின்றனர். அதே நேரம் அணிகள் வீரர்களை ஏலம் எடுப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட மொத்த நிதித்தொகை ₹120 கோடியாக இருந்த காலகட்டத்தில் ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் ₹27 கோடி மற்றும் ₹26 கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

IPL
ஐபிஎல் கிரிக்கெட் ஏலம்

ரிஷப் பந்தின் ₹27 கோடி ஒப்பந்தம் கையெழுத்தான போது அப்போது வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்காக அணிகள் நிர்ணயித்த தொகை ₹120 கோடி என்ற அளவில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் படி , மெகா ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்ய ₹150 கோடி வரை நிதியினை ஒதுக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மொத்த தொகை உயர்த்தப்படும் போது வீரர்களின் ஒப்பந்தம் ₹40 கோடி வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

ஐபிஎல் அணியின் வீரர்களை தக்க வைக்க ₹40 கோடி கட்டணம் சாத்தியமா? என்பது ஒவ்வொரு அணியின் நிதி அமைப்பு மற்றும் அவர்களின் சூழ்நிலை பொருத்தி அமையும். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, 2025 மெகா ஏலத்தில் ரிஷப் பந்திற்காக ₹27 கோடி வரை ஏலம் கேட்கும் வகையில் தங்கள் நிதியை நிர்வகித்திருந்தது. மேலும் ஐயரின் இறுதி தொகை ₹26.75 கோடியாக இருந்தது. பொதுவாக ஐபிஎல் அணிகள் எதுவும் வறுமையில் வாடும் முதலாளிகளுக்கு சொந்தமில்லை