போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல்: மீண்டும் எப்போது தொடங்கும் ? வெளியான புதிய தகவல்

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட்டை வருகிற 16 அல்லது 17-ந்தேதி தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
IPL 2025
IPL 2025
Published on

2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), உலகின் முதன்மையான டி20 கிரிக்கெட் போட்டியாகும். 10 அணிகள் இடையிலான உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். மெகா நிகழ்வான இறுதிப்போட்டி வருகிற 25-ந் தேதி கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 18-வது சீசனில் மொத்தம் 65 நாட்கள் 13 நகரங்களில் நடக்கிறது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் தீவிரமான தாக்குதல் மற்றும் போர் பதற்றத்தால் நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவியதால், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தர்மசாலாவில் 8-ம்தேதி நடந்த பஞ்சாப்- டெல்லி இடையிலான லீக் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதையும் படியுங்கள்:
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒரு வாரத்திற்கு நிறுத்தம்- BCCI அதிகாரபூர்வ அறிவிப்பு
IPL 2025

இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இன்னும் 12 லீக் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 16 ஆட்டங்களை நடத்த வேண்டி உள்ளது.

இந்த நிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டதையடுத்து ஐ.பி.எல். போட்டியை மீண்டும் தொடங்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வருகிற 16 அல்லது 17-ந்தேதி போட்டி மீண்டும் தொடங்கி விடும் என்று ஐ.பி.எல். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தங்கள் அணி வீரர்களை திரும்ப அழைக்கும்படி 10 அணி நிர்வாகங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஞ்சிய போட்டிக்கான அட்டவணை இன்று அவர்களிடம் வழங்கப்படும்.

எஞ்சிய ஆட்டங்கள் 4 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், டெல்லி, தர்மசாலாவில் இனி போட்டிகள் நடைபெறாது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஏற்கனவே அறிவித்தபடி ஐதராபாத்தில் நடைபெறும். ஆனால் புதிய அட்டவணைப்படி மே.31 அல்லது ஜூன்.1-ந்தேதி இறுதிப்போட்டி நடக்க வாய்ப்புள்ளதால், அந்த சமயத்தில் கொல்கத்தாவில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதால் கருதப்படுவதால் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இருந்து ஆமதாபாத்துக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த மாதத்திற்குள் ஐ.பி.எல். போட்டியை முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முனைப்பு காட்டுவதால் இனிவரும் நாட்களில் பெரும்பாலான போட்டிகள் இரண்டு ஆட்டங்களாக நடைபெறும் எனக்கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் 2025: பிசிசிஐ அறிமுகப்படுத்திய மூன்று புதிய விதிமுறைகள்
IPL 2025

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com