சிஎஸ்கே திரும்புகிறாரா அஸ்வின்?

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

-மதுவந்தி

ந்தியாவின் அனுபவம் மிகுந்த கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னையின் சிஎஸ்கேவிற்கு வருகிறாரா? அவரை சென்னை அணி திரும்பக் கொண்டுவந்துவிட்டதா? இப்படி ஒரு செய்தி நேற்று ஊடகங்களில் பரவியது.

என்னவென்று பார்த்ததில், சிஎஸ்கே நிர்வாகம் அவரை சென்னை அணியின் ஒரு அங்கமான சூப்பர் கிங்ஸ் வெஞ்சர்ஸ் மற்றும் உயர் செயல்திறன் மையத்தின் பொறுப்புகளைக் கவனிக்கவும், இளம் வீரர்களை ஊக்குவிக்கவும், அந்த மையத்தின் தலைமைப் பொறுப்பில் நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் சென்னை அணிக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் ஊடகங்கள் அறிவித்தன.

இதைப் பற்றி அஸ்வின் "ஆரம்பித்த இடத்திற்கே வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டை வளப்படுத்தவும், கிரிக்கெட் சமூகத்துக்கு எனது பங்கை அளிப்பதுமே எனது முக்கியக் குறிக்கோள்" எனக் கூறினார்.

சென்னை சிஎஸ்கேவின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், "அஸ்வின் மீண்டும் சென்னை அணிக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு சிறந்த வீரர் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இந்திய அணியாக இருந்தாலும் சரி, தமிழக அணியானாலும், கிளப் அணியாக இருந்தாலும் சரி, அவருடைய பங்கு அந்த அணிக்கு மிகப் பெரியது.  உயர் செயல்திறன் மையத்தையும், மையத்தில் சேர உள்ள இளம் வீரர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், பயிற்சி மற்றும் திறனை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் அவரால் சிறப்பாகச் செய்யமுடியும். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் ஏலத்தைப் பற்றியும் அவரை ஏலத்தில் எடுக்கமுடியுமா என்பதைப் பற்றியும் இப்பொழுது எதுவும் கூறமுடியாது, அது நம் கையிலும் இல்லை" என்றார்.

நாவலூரில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தின் கட்டமைப்பு முடிந்துவிட்ட நிலையில், அதன் மற்ற உள்கட்டமைப்பு வசதிகள் அடுத்த ஆண்டு ஐபிஎல் துவங்கும் முன்பு தயாராக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் சென்னை அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பயிற்சிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முப்பத்தேழு வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணையின் சுழல் பந்து வீச்சாளர் ஆவார். ஐநூறுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின் 2010இல் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்காக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இருபது ஓவர் போட்டிகளிலும் பின்னர் 2011இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியிலும் விளையாடத் தொடங்கினார்.

இதையும் படியுங்கள்:
ஆந்திரா ஸ்பெஷல் பேப்பர் ஸ்வீட் பூதரெகுலு ரெசிபி!
ரவிச்சந்திரன் அஸ்வின்

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் 2008 முதல் 2016 வரை சிஎஸ்கேவிற்காக விளையாடினார் அஸ்வின். இடையில் புனே, பஞ்சாப் மற்றும் டெல்லிக்காக விளையாடிய அவர், 2022 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

அடுத்த ஆண்டு, ஐபிஎல் அணிகளுக்கான மாபெரும் ஏலம் நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் அணி அஸ்வினை விடுவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், காரணம் ஏலத்தின் பொழுது அணியில் நான்கு இந்திய வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும். அப்படி விடுவிக்கும்பச்சத்தில் அஸ்வினை சென்னை அணி ஏலத்தில் எடுக்குமா, எடுப்பதற்கான வாய்ப்புகள் அமையுமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com