ஜெயிக்கப் போவது யாரு? ரிக்கி பான்டிங்கின் கணிப்பா? இந்தியாவின் நம்பிக்கையா?

Ind VS Aus
Ind VS Aus
Published on

இந்தியா ஆஸ்திரேலியா மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை வருகின்ற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடரை இந்தியா கைப்பற்றும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேநேரம் ஆஸ்திரேலியா 3-1 என்ற வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றும் என ரிக்கி பான்டிங் கணித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முக்கியமான டெஸ்ட் தொடராக பார்டர் - கவாஸ்கர் கோப்பை பார்க்கப்படுகிறது. இக்கோப்பையைத் தொடர்ச்சியாக 4 முறை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த இரண்டு தொடர்களையும் (2018/19, 2020/21) இந்தியா வென்றது தான். ஆஸ்திரேலியா நகர் காபாவில் நடைபெற்ற டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம் அப்போட்டியை மட்டுமின்றி, தொடரையும் வெல்ல காரணமாக அமைந்தது. இந்நிலையில், 5வது முறையும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என பிசிசிஐ-யும், இந்திய ரசிகர்களும் நம்புகின்றனர்.

ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும் என்பதற்காகவே ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் சொல்லப்படுகிறது. தற்போது முகமது ஷமியும் காயத்தில் இருந்து மீண்டு விட்டதால், அனுபவம் வாய்ந்த இந்திய அணியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது பிசிசிஐ. ஆஸ்திரேலியாவை வெல்ல இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பான்டிங் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தும் என கணித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஸ்டீவன் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுகிறார். இந்திய அணிக்கு எதிராக இவர் நிச்சயமாக நல்ல பங்களிப்பை தருவார். மேலும், டெஸ்ட் போட்டிகள் டிராவை நோக்கிச் செல்ல வாய்ப்பில்லை என்றும் பான்டிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
விராட் கோலி இந்த விஷயத்தில் கில்லி - ஹர்பஜன் சிங் புகழாரம்!
Ind VS Aus

ஏற்கனவே கடந்த இரு முறையும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய உத்வேகத்தோடு இந்திய அணியினர் செய்லபடுவார்கள்‌ என்று நாம் எதிர்பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட் வெற்றிகளுக்கு மிகச்சிறந்த வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் உதவி வருகின்றனர். தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பது, ஆஸ்திரேலிய அணியினரை நிச்சயமாக கலங்கடிக்கச் செய்யும் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகத்திற்கு ஒத்துழைக்கும் என்பதால், இரு அணி வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

டெஸ்ட் போட்டிகளில் தனது ஆதிக்கத்தை இந்தியா மீண்டும் நிரூபித்து ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமா அல்லது ரிக்கி பான்டிங்கின் கணிப்பு நிஜமாகுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com