அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை ‘வாயுத் தொல்லை’.
எண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா போதை பழக்கம் வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால், வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.
வாயுவினால் உண்டாகும் உபாதைகள் தீர....
1.வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு சிறிதளவு பெருங்காயத்தை நெய்யில்பொரித்து சாப்பிட வேண்டும்.
2.இரண்டு வெற்றிலையுடன் நான்கு பல் பூண்டு, நான்கு மிளகு சேர்த்து, மை போலஅரைத்து சாப்பிட வேண்டும். பிறகு ஒரு டம்ளர் மோர் குடிக்கவும். இதனால் வாயு, வயிற்றுப் பொருமல் குணமாகும்.
3.இஞ்சி, சுக்கு, கடுக்காய் இவை மூன்றும் வாயுப் பிடிப்பை நீக்கும் மருந்து.
4.புதினா துவையல் அல்லது புதினா பொடியை சாப்பிட்டு வர வாயுத்தொல்லைநீங்கும்.
5.வெள்ளைப் பூண்டினை பசும்பாலில் வேக வைத்து, பிறகு அந்த பூண்டையும்பாலையும் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை பறந்துவிடும்.
6.அஜீரணம், வயிற்று வலி, வாயு இவை மூன்றும் குணமாக குப்பைமேனி இலையைகாயவைத்து, பொடி செய்து காலையும் மாலையும் மோரில் கலந்துசாப்பிடவேண்டும்.
7.வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள்உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.
8.தினமும் பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது. இது ஜீரணசக்தியையும் தூண்டும்.
9.சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.