தோனிக்கு பதில் இவரா? சிஎஸ்கே விக்கெட் கீப்பர் இடத்தில் மாற்றமா?

Dhoni
Dhoni
Published on

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதில் ஒரு மாற்று விக்கெட் கீப்பரை அணியில் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அவர் ஒரு இளம் தமிழக வீரர் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பல எதிர்பார்ப்புகளுக்கும் ட்விஸ்ட்களுக்கும் நடுவே விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில்தான் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ஏற்ற வீரர்களை தக்கவைத்துக் கொண்டனர். இதனையடுத்து ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க  மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில்,   320 கேப்டு பிளேயர்கள், 1,224 அன்கேப் பிளேயர்கள், மற்றும் 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் 1165 பேர் இந்திய வீரர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். மேலும், இதில் ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் கலந்து கொள்வதால் மெகா ஏலத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இந்த ஏலம் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என்றும், சவுதி அரேபியா தலைநகர் ஜெட்டாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் 2-வது ஐபிஎல் ஏலம் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 2024 ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தலா 18 கோடியை வழங்கி உள்ளது. மதிச பதிரனாவுக்கு 13 கோடியும், ஷிவம் துபேவுக்கு 12 கோடியும் கொடுத்துள்ளனர். மகேந்திரசிங் தோனியை அன்கேப்ட் வீரர் இடத்தில் தக்கவைத்துள்ளனர்.

என்னத்தான் தோனி அணியில் தக்கவைக்கப்பட்டாலும் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். ஆகையால், அவருக்கு பதிலாக முழு நேர விக்கெட் கீப்பரை சென்னை அணி நிர்வாகம் வாங்கத் திட்டமிட்டுள்ளது. அதேசமயம் சென்னை அணி நிர்வாகத்தின் கையில் வெறும் 55 கோடி மட்டுமே உள்ளதால், பெரிய விக்கெட் கீப்பரை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அதற்கு மட்டுமே செலவு செய்யும் சூழல் வந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
'இடி இடிக்குது, மின்னல் முழங்குது அவ பேரக் கேட்டா' - 'Nayanthara: Beyond the Fairy Tale'!
Dhoni

ஆகையால், குறைந்த தொகையில் கிடைக்கும் விக்கெட் கீப்பரை வாங்க சிஎஸ்கே முயற்சிக்கும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, டிஎன்பிஎல் தொடரில் தொடர்ந்து அசத்தி வரும், சேப்பாக் சூப்பர் கில்லி அணி விக்கெட் கீப்பர் பிரதோஷ் பௌலை வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

23 வயதாகும் இவரும் ஒரு தமிழக வீரராவார். கடைசி 5 போட்டிகளில் 4 அரை சதம், ஒரு சதமும் அடித்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில், அவரது சராசரி 60.06ஆக உள்ளது. மேலும், தென்னாப்பிரிக்க மண்ணில், இந்திய ஏ அணியில் இடம்பெற்று சதமும் அடித்துள்ளார். ஆகையால், சென்னை அணி இவரை வாங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com