சாம்பலில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவை! இஷான் கிஷன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது எப்படி?

ishan kishan
ishan kishansource:outlook
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

பிப்ரவரி 7 ,2026 தொடங்கி நடைபெற்று வரும் பத்தாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும், பேட்டராகவும் இறக்கை கட்டி பறக்கும் இசான் கிசான் (27)சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல ஜொலிக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி ஆட்டம் :

பிப்ரவரி 15 அன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 27 பந்தில் அரை சதம் எட்டினார்.மொத்தம் 40 பந்துகளை சந்தித்து 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் இஷான் கிசான்.

சவால்களும் மீண்டு வந்த பாதையும் :

இவர் உலகக்கோப்பை தொடரில் இடம்பெற பல சோதனைகளை கடந்து வந்துள்ளார். உள்ளூர் ரஞ்சிக்கோப்பை போட்டியை புறக்கணித்ததால் 2024 ஆம் ஆண்டில் பிசிசிஐ-ன் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவருக்கு 2025-ல் நடந்த சையது முஸ்தாக் அலி டி20 தொடர் திருப்புமுனையாக அமைந்தது .

பத்து போட்டியில் 517 ரன்கள் குவித்து ஜார்கண்ட் அணிக்கு முதல் கோப்பையை பெற்றுத் தந்தார். இதில் இவரது சராசரி(57.44) ஸ்டிரைக் ரேட்(197.32). அந்த வேளையில் கேரளாவைச் சேர்ந்த சாம்சன் சொதப்ப உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு இஷான் கிசானை தேடி வந்தது.

இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்ற இஷான் கிசான் பாட்னாவில் உள்ள இவரது கிரிக்கெட் அகாடமியில் நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டது; கோபத்தை குறைக்க தியானம் செய்தது; மன அமைதிக்கு புனித பகவத் கீதையை அன்றாடம் படித்தது இவரது வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருந்தது.

ரிஷாப் பண்ட், சாம்சன், துருவ் ஜூரல் போன்ற கீப்பர்- பேட்டர்களின் சவால்களை எல்லாம் சமாளித்து முதிர்ச்சி அடைந்த வீரராக மாறிய இஷான் கிசான் மைதானத்தின் நாலா புறமும் பந்தை விளாசி இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளதாக இந்தியா -பாகிஸ்தான் அணியின் ஆட்ட நாயகனான இஷான் கிசான் கூறியிருக்கிறார்.

இஷான் கிஷானின் துணிச்சலான பேட்டிங் வியக்க வைத்ததாகவும், 'லெக்' திசையில் மட்டுமல்லாமல் 'ஆப்' திசையிலும் விளாசுவதோடு 'ரிவர்ஸ் ஸ்வீப் 'மூலம் ஸ்பின்னர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து போட்டியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார் என எதிரணியான பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியுள்ளது இஷான் கிசானின் திறமைக்கு சான்றாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அதிசயம்: 11 வீரர்களும் 0 ரன்கள்! 1000 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த பிரணவ்..!
ishan kishan
logo
Kalki Online
kalkionline.com